தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 24 மே, 2014

மத்திய சங்க செய்திகள்

           நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா 23-05-2014 அன்று பொது மேலாளர் (ESTT )திரு R .K .கோயல் அவர்களை சந்தித்து பேசினார் .அப்போது திரு கோயல் அவர்கள் TTA மற்றும் JTO ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்வதற்கு BSNL நிர்வாக கமிட்டி ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் , ஜூன் முதல் வாரத்தில் கூடவுள்ள   BSNL போர்டு மீட்டிங்கில் அது ஒப்புதல் பெறப்படும் என கூறியுள்ளார் .இந்த முடிவால் officiating JTOs அனைவரும் ரெகுலர் ஆகுவதற்கும் , JTO போட்டி தேர்வில் பங்கேற்க சேவை காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறையும் வாய்ப்பும் உள்ளது .

          JTO போட்டி தேர்வில் இராணுவ சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என நமது BSNLEU சங்கம் நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது .தற்போது    மாண்புமிகு அலகாபாத்  நிர்வாக நீதி மன்றம் 20-05-2014 அன்று அளித்த தீர்ப்பின் படி குரூப் "C " கேடரில் பணியாற்றிய இராணுவ சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொண்டு 7 வருட சேவை இருப்பவர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவு வெளியிட்டு விட்டது .இந்த தீர்ப்பின் அடிப்படையில் போட்டி தேர்வின் முடிவில்  எக்ஸ் சர்வீஸ் மேன்கள் உரிமைகள் பாதுகாக்க நமது சங்கம் உரிய    நடவடிக்கை எடுக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக