பிப்ரவரி 16
- 1568 - நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- 1796 - ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1937 - வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1945 - முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.
- 1945 - அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
- 1947 - 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.
- 1956 - மரண தண்டனையை ஒழிக்கும் சட்டத்தைப் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
- 1959 - ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
- 1980 - இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.
- 1980 - உலகிலேயே மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் பிரான்சில் ஏற்பட்டது. Lyon நகரிலிருந்து வடக்கில் பாரிசை நோக்கி 175 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் வாகனங்கள் நின்று விட்டன.
- 1988 - சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
- 2005 - கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக