தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 7 செப்டம்பர், 2013

ஒப்பந்த ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டாதே
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கோவை, செப். 6 -பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டித்து கோவையில் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நாடுமுழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இவர்களில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிவோரிடையே ஊதியம், போனஸ் மற்றும் சட்ட சலுகைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இதில், கோவை ரயில்நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன், மாநில துணைத் தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.ஆர்ப்பாட்டத்தின் போது, பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களிடையே சம்பளம், பணிவரன்முறை, போனஸ், இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவைகளில் பாரபட்சமில்லாமல் ஒரே மாதிரியான சட்டத்தை அமுலாக்கிட வேண்டும். புதிய பென்சன் திட்ட மசாதோவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இறுதியில், சங்கத்தின் தமிழ்மணி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, சாய்பாபா காலனி தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காந்திபார்க் கிளை தலைவர் ஆர்.சுந்தரராஜன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் என்.அன்பழகன் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் கே.சந்திரசேகரன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார். இறுதியில் வி.கருணாகரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பெண் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்.ஜெயமணி தலைமை தாங்கினார். வி.சசிதரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக