தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 11 செப்டம்பர், 2013

பாரதியின் பாட்டு நமது படையை வழிநடத்தும்!

- மதுக்கூர் இராமலிங்கம்




இன்று (செப்டம்பர் 11) மகாகவி பாரதி நினைவுநாள்
மகாகவி பாரதியின் வாழ்க்கையை புதுக்கவிதையில் காவியமாக கவிராஜன் கதைஎன்ற பெயரில் வரைந்த கவிஞர் வைரமுத்து, முடிப்பு பகுதியில் இப்படிக் கூறியிருப்பார்:
இதுவா பாரதி
நீ
பார்க்க நினைத்த பாரதம்?
இதுவா பாரதி
நீ
சொல்லி கொடுத்தசுதந்திரம்?
எங்களுக்கு
வெட்கப்படக் கூட
விவஸ்தை இல்லை..
மகாகவி பாரதி நாடு விடுதலையடையும் என்றே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோம்என்று ஆர்ப்பரித்துக் கூத்தாடினார். ஆனால், இன்றைக்கு மத்திய ஆட்சியா ளர்கள் ஆனந்த சுதந்திரத்தை அன்றாடம் தவணை முறையில் விற்றுக் கொண்டி ருக்கிறார்கள்.
பாரதியின் வார்த்தையில் சொல்வதா னால், “கோவிலில் பூசை செய்வோர் சிலை யை கொண்டு விற்றல்போலதேசத்தின் சுயசார்பை, சுயாதிபத்தியத்தை அந்நியரிடம் அடகுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். சில்லரை வர்த்தகம் துவங்கி, காப்பீடு, வங்கி, ஓய்வூதிய நிதி என அனைத்து துறைகளை யும் அந்நியருக்கு பந்தி வைத்து பக்குவமாகப் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.சுதேசியின் அருமையை வார்த்தை களால் அன்றி, வாழ்க்கையால் உணர்ந்தவர் பாரதி. அவரின் தந்தையார் சின்னச்சாமி அய்யர் சீவலப்பேரியில் பிறந்தவர். தொழிற் சாலை ஒன்றை துவக்க வேண்டும் என் பதற்காகவே எட்டையபுரத்தில் குடியேறி னார். பஞ்சாலை ஒன்றை துவக்கி வெளி நாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விரிந்தது அவரது கனவு.
எட்டையபுரத்தில் எந்திரங்களைக் கொண்டு ஆலை ஒன்றும் துவக்கப்பட்டது. ஆனால், வெள்ளையர்களின் சதியால் அந்த ஆலை அழிந்தே போனது. சின்னச்சாமியின் குடும் பமும் நொடிந்து வறுமையின் பிடியில் சிக் கியது. பாரதி தனது சுயசரிதையில், “ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும் ஊணர் செய்த சதியில் இழந்தனன்என்று தனது தந்தை செய்த தொழில் பற்றி எழுதியுள்ளார்.பின்னர் 1893ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிராங்க் ஹார்வி, ஆண்ட்ரூ ஹார்வி என்ற இரு சகோதரர்கள் திருநெல்வேலியில் ஒரு பஞ்சாலையை துவக்கினர்.
அதுதான் கோரல் மில் என்று அழைக்கப்பட்டு மதுரை வரை பரவியது. பாரதியின் தந்தை துவக்க நினைத்த பஞ்சாலையின் சமாதி மீதே மதுரா கோட்ஸ் ஆலை கட்டப்பட்டது.இதனால்தான் பாரதி தனது கவிதை களில் ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்என்றும் உலக தொழிலனைத்தும் உவந்து செய்வோம்என்றும் பாடினார்.பாரதியால் மாப்பிள்ளைஎன்று அன் போடு அழைக்கப்பட்ட வ.உ.சி. சுதேசிக் கப்பல் ஓட்ட முனைந்தபோது, அதற்கு தோள் கொடுத்தார் அவர்.
தமது இந்தியா பத்திரிகையில் வ.உ.சி.யின் முயற்சிக்கு துணை நிற்குமாறு வாசகர்களை வேண்டி னார். ஊணர் சதியால் சுதேசிக் கப்பல் கம்பெனி தள்ளாடியபோது, ‘இந்தியா’ (30.1.1909) பத்திரிகையில் பாரதி இப்படி எழுதினார்.சுதேசிக் கப்பல் பொதுஜன சகாயம் என்ற காற்று வீசாதபடியால் மேலோட்டம் இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு சிரமப்பட்டு நல்லநிலைக்கு வந்த சுதேசிக் கம்பெனி இன்னும் சுமார் 2 லட்சம் ரூபாய் எங்கேனும் கிடைக்குமா னால் பின்னர் எக்காலத்திற்கும் மரணப் பயமின்றி ஸ்திரமாயிருக்கும்... தூத்துக்குடி சுதேசிக் கம்பெனி நமது முதற்பெரும் தொழில் முயற்சி.
இதை கைவிட்டுவிட் டால் நம்மை பிறகு உலகத்தில் யாரும் நம் பவே மாட்டார்கள். உலகத்தார் எல்லோரும் சிரிப்பார்கள்”.வெள்ளையரின் சூழ்ச்சிக் காற்றில் சுதேசிக் கப்பல் கம்பெனி கவிழ்ந்துபோனது. மேலைக் கடல் முழுவதும் கப்பல் விடும் பாரதியின் கனவு கருகிப் போனது.உழைப்பாளர்களின் வேர்வையினாலும், இந்திய மக்களின் செல்வத்தாலும் உருவாக் கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இன் றைக்கு திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. அனைத்திலும் அந்நியர் என்ற நிலை ஏற் படுத்தப்படுகிறது. இன்றைக்கு பாரதி இருந் திருந்தால் பொழுதெல்லாம் எங்கள் செல் வம் கொள்ளைக் கொண்டு போகவோஎன்று பாடியிருப்பார்.
புதிய பாஞ்சாலி சபதத் தையும் எழுதியிருப்பார்.தேசத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் பாரதி நினைக்கப்படுகிறார். பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோமடா என்றார் அவர். ஆனால் இன்றைக்கு தாய்த் திருநாட்டின் பெண்கள் படும்பாடு சொல்லும் தரமன்று.தமிழை மூச்சுக்காற்றாய் சுவாசித்தவர் அந்த முண்டாசுக் கவிஞர். ஆனால் இன் றைக்கு ஆலயம் துவங்கி அலுவலகம் வரை, கல்விச்சாலை துவங்கி நீதிமன்றம் வரை தாய்த்தமிழ் தள்ளிவைக்கப்படுகிறது. இது கண்டு மகிழுமோ அந்த கவியின் நெஞ்சம்.சாதியில்லாத, மதபேதமில்லாத சமூ கமே அவர் காண விரும்பிய புதிய இந்தியா.
ஆனால், நாடு விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், தீண்டாமைக் கொடுமைக்கூட ஒழியவில்லை. இதை பொறுக்குமோ அவரது உள்ளம். அவர் பாடிய விநாயகர் விடுதலைக்கு துணைநின்ற தேசிய விநாயகர். இன்றைக்கு சிலர் தூக்கிக் கொண்டு அலைவதோ கலகப் பிள்ளை யார்கள்.ஜோதிடம் தனை இகழ்என்றார் அவர். ஆனால் இன்றைக்கும் புதிய புதிய வழி களில் மூடநம்பிக்கைகள் முளைக்கின்றன. அன்றைக்கே பாரதி மூடநம்பிக்கையை சாடும்வகையில் ஒட்டகத்திற்கு ஓரிடத் திலா கோணல்? தமிழ்நாட்டிற்கு ஒருவழி யிலா துன்பம்? என்று ஆதங்கப்பட்டார்.
வயிற்றுக்குச் சோறிட வேண்டும்என்று கட்டளையிட்டார் அவர். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் உணவு பாது காப்பு சட்டத்திலும் ஓட்டையை போட்டு வறுமைக்கோடு என்று மோசடியாக வரைந்து வயிற்றைக் கிழித்து தைத்து சுருக் குமாறு கூறுகின்றனர். தனியொரு மனித னுக்கு உணவில்லை என்றால் ஜெகத் தினை அழிக்கச் சொன்னார் அவர். வறுமை யை ஒழிக்க வக்கில்லாத இவர்கள், வறு மைக் கோட்டை உயர்த்தி வறுமைப்பட் டவர்களை அழிக்கிறார்கள்.
செப்டம்பர் 11ல் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும் நினைக்கப் படுகிறார் அந்த மகாகவிஞர். உலகிற்கொரு புதுமையாய் ஒப்பில்லாத சமத்துவ சமு தாயத்தை அமைத்திடும் வரையில் பாரதி யின் பாட்டு நமது படையை வழிநடத்தும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக