தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 5 ஜூலை, 2013

கோவை புத்தகக்கண்காட்சிகோவையில் உள்ள முதன்மை பொதுமேலாளர் அலுவலகத்தில் 05-07-2013 அன்று நமது BSNL ஊழியர் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து புத்தககண்காட்சியை நடத்தினர்.இந்த புத்தக விற்பனையை முதன்மை பொதுமேலாளர்.திரு. ஷாஜஹான், ITS அவர்கள் துவக்கி வைக்க முதல் விற்பனையை கீதா உணவக உரிமையாளர் திரு.N. தேவராஜன் பெற்றுக்கொண்டார். தோழியர்.சூரியகலா அவர்களின் தலைமையிலும் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில் , BSNLEU மாநிலத்தலைவர் தோழர். K. மாரிமுத்து மற்றும் மாநில துணைத்தலைவர் தோழர். V.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தகண்காட்சியை திரு. P.ரத்தினசாமி,DGM[A], திரு வெங்கடாசலம்,DGM[F], திரு உஸ்மான் அலி,AO, , தோழர்.C. ராஜேந்திரன்,DS, BSNLEU ஆகியோர் வாழ்த்தி பேசினார்.தோழர்கள் A.கனகராஜ், P.சின்னதுரை, P.சுந்தரம், ராபர்ட் ஆகியோர் ஆயிரம் ரூபாய்க்குமேல் புத்தகங்களை வாங்கினார். அன்று ஒரு நாளில் ரூ.21,500 /-க்கு புத்தக விற்பனையை நடத்திய கிளைச்செயலர்,M.மதனகோபால் உள்ளிட்ட தோழர்களை மாவட்டச்சங்கம் மனதார பாரட்டுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக