தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 10 நவம்பர், 2021

ஊதிய மாற்றத்திற்கு பேச்சு வார்த்தை நடத்துவதற்கான குழு

 அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கு பேச்சு வார்த்தை நடத்துவதற்கான குழு மாற்றியமைக்கப்பட்டு விட்டது .


27.10.2021 அன்று AUAB தலைவர்கள் மற்றும் CMD BSNL ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ஊதிய பேச்சு வார்த்தைக்குழு மாற்றியமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இன்று (10.11.2021), அதற்கான உத்தரவை கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு வெளியிட்டுள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் பட்டியலில், கேரள மாநில செயலர் தோழர் C.சந்தோஷ் குமார் இணைக்கப்பட்டுள்ளார்.


ஊதிய பேச்சு வார்த்தைக் குழு மாற்றியமைக்கப் பட்ட நிகழ்வு, ஊதிய பேச்சு வார்த்தையில் ஏற்பட்டிருந்த முட்டுக்கட்டையை நீக்கியுள்ளது. இது AUAB தலைமையில் ஒன்று பட்டு செயல்பட்ட அனைத்து சங்கங்களின் மாபெரும் வெற்றி.


 -தோழர் P.அபிமன்யு 

 பொதுச்செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக