தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 1 ஜனவரி, 2021

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்


 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
2020ல் நாம் கண்டவை:-
கொரோனா தொற்று உலகையே ஸ்தம்பிக்க செய்தது.
கொரோனாவை பயன்படுத்தி உலக அரங்கில் முதலாளிகள் கொள்ளை கொள்ளையாக சொத்தை சேர்த்தனர்.

இந்தியாவிலும் சாதாரண ஏழை எளிய மக்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தும், தண்டவாளத்தில் ஓய்வெடுக்கும் போது ரயில் ஏறி மிதித்து மரணமடைந்துக் கொண்டிருக்கும் போது, அம்பானி, அதானி சொத்துக்கள் உலக முதலாளிகளுடன் போட்டி போட்டு உயர்ந்தது.

கொரோனாவை பயன்படுத்தி பொதுத்துறைகள் தனியார்மயமாக்கலும், தொழிலாளர்களின் வேலை இழப்பும் திட்டமிட்டு அமல்படுத்தப்பட்டது.

தொழிலாளர் நலச்சட்டங்கள் மாற்றப்பட்டன. வேளாண் சட்டங்கள் மாற்றப்பட்டன.

அதே சமயம் கொரோனா தொற்று அபாய காலத்திலும்,

25 கோடி மக்கள் கலந்துக் கொண்ட ஜனவரி 8 மற்றும் நவம்பர் 26 பொது வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.

நவம்பர் 26 முதல் பல கோடிக்கணக்கான விவசாயிகள், மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

இளைஞர்கள் கையில் எதிர்காலம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் கேரளாவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளூர் நிர்வாகங்களில் இளம்பெண்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

BSNLல் VRS திட்டம் அமலாக்கம். OUTSOURCING முறை அமலாக்கம். ஊதியம் என்பது உரிய தேதியில் இல்லாத நிலை. அனைத்திற்கும் மேலாக தனியார்களுக்கு எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னரே கொடுத்திருந்த 4G சேவையை வழங்க இன்று வரை BSNLக்கு அனுமதி மறுப்பு.

உலகத்தில் உள்ள அனைத்து துன்பங்களையும், ஆட்சியாளர்களும், நிர்வாகமும் கொடுத்தது உண்மை. ஆனால் அத்தனை துன்பங்களையும் தாங்கி, துள்ளி எழுந்து ஒவ்வொரு முறையும் போராடி பல நிவாரணங்களை பெற்றதும் இதே ஆண்டில் தான்.
2020 கொடுத்த அனுபவத்தில், மேலும் நமது செயல்பாட்டை தீவிரப்படுத்துவோம். 2021ஐ BSNLன் ஆண்டாக மாற்றிட சபதமேற்போம். இதற்கு எதிராக வரும் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து முன்னேறுவோம். அனைத்து பொதுத்துறைகளையும் பாதுகாக்கும் ஆண்டாக 2021ஐ மாற்றிடுவோம்.  இந்திய தொழிலாளிகளின் ஒட்டு மொத்த நலன்களுக்காக கூட்டாக களம் கண்டு வெற்றி பெறுவோம்.
என புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
சி.ராஜேந்திரன்

மாவட்ட செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக