தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 31 டிசம்பர், 2019

இன்று பணி ஓய்வு பெற இருக்கும் அனைவருக்கும் கோவை மாவட்ட சங்கம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது

BSNLன் புத்தாக்கத்தின் ஒரு பகுதி என்று மத்திய அரசாங்கம் அறிவித்த விருப்ப ஓய்வு திட்டம்-2019ற்கு விருப்பம் தெரிவித்து தமிழ் மாநிலத்தில் இருந்து 5300க்கும் மேற்பட்ட தோழர்களும் கோவை மாவட்டத்தில் 562 தோழர்களும் , இன்று (31.01.2020) பணி ஓய்வு பெற்று செல்கின்றனர். BSNLன் வளர்ச்சிக்கு இத்தனை ஆண்டு காலம் பாடுபட்டதோடு, இந்த நிறுவனத்தை காப்பாற்ற நடைபெற்ற இயக்கங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட இந்த தோழர்களின் பணி ஓய்வு காலம் சிறக்க கோவை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது. வருங்காலத்திலும் BSNLஐ பாதுகாக்க நடைபெறுகின்ற இயக்கங்களிலும் இவர்கள் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்ற வேண்டு கோளுடன் மீண்டும் அனைவருக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் கோவை மாவட்ட  சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக