தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 26 அக்டோபர், 2019

25.10.2019 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில் CMD BSNL பேசிய பேச்சு என்பது, அடக்குமுறையானது, ஏற்றுக் கொள்ள இயலாதது மற்றும் வருந்தத்தக்கது.

25.10.2019 அன்று BSNL CMD திரு P.K.புர்வார் அவர்கள் கார்ப்பரேட் அலுவலகத்தில் பேசிய பேச்சு பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. ஒட்டு மொத்தமாக எதிர்மறையாகவே இருந்த CMDயின் பேச்சின் மீது கடுமையான கோபத்துடன் பல தோழர்கள் மத்திய சங்கத்திற்கு அலைபேசி மூலமாகவும், குறுஞ்செய்திகள் மூலமாகவும் தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தில் CMD BSNL கூறியதாவது.

a. தற்போதுள்ள BSNL ஊழியர்களின் நடத்தைகளும், நடவடிக்கைகளும் தொடர முடியாது.

b. 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு திட்டத்தை பெற்றுக் கொண்டு சென்று விட வேண்டும்.

c. தற்போது செய்து வருவதை விட இரண்டு மடங்கு பணிகளை செய்ய முடியாத எந்த ஒரு ஊழியரும் BSNLல் தொடர முடியாது. அவர் BSNLஐ விட்டு சென்று விட வேண்டும்.

BSNL CMDயின் இந்த அறிக்கைகள் அடக்குமுறையானது, ஏற்றுக் கொள்ள இயலாதது மற்றும் வருந்தத்தக்கது. தங்களது கடுமையான மற்றும் அர்ப்பணிப்புடன் ஆற்றிய பணிகளால், BSNLன் இருத்தலை உறுதி செய்துள்ள BSNL ஊழியர்களை அவர் இழிவு படுத்தி உள்ளார். விருப்ப ஓய்வு திட்டத்தை யாரும் நிர்பந்திக்க மாட்டார்கள், அது தன்னார்வத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டியது என மத்திய தொலை தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், இதனை மீறி BSNL CMD, 50 வயதிற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்டிப்பாக விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல வேண்டும் என்று கூறுகிறார். இது போன்ற அடக்குமுறைகளை சகித்துக் கொள்ள முடியாது. AUABயில் உள்ள இதர சங்கங்களோடு BSNL ஊழியர் சங்கம் தொடர்பு கொண்டுள்ளது. இதன் மீது பொருத்தமான நடவடிக்கையை மத்திய சங்கம் எடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக