தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

மூச்சு நின்றுபோமோ? மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தால்??


மூச்சு நின்றுபோமோ? மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தால்??
ஜீவன்
அழிந்துபோமோ?
சில ஆயிர நிதி இழப்பால்??
இலவசமெல்லாம் வெகுமானமாகுமோ?
அவமானமென்று அறியாயோ நீ தோழா!
ஜல்லிக்கட்டு காயத்தால் ஜன்னியா வந்துவிடும்?
வீரத்தின் தழும்பு அது!       
விழுப்புண்ணே அழகானது!
இதுவும் ஓர் ஜல்லிக்கட்டே🤺
முரட்டு அரசை...
மூர்க்க
டி டீ யை..
விரட்டும் வீரன்
நீ ...தான்!🥊
வீண் அச்சம் விட்டெழு🤾
வீறுகொண்டு கிளர்ந்தெழு🏋
காட்டாற்று வெள்ளமாய்..
சுட்டெரிக்கும் அக்கினியாய்..
சூழ்ச்சிகளை சுட்டழி🔥
தோற்றதில்லை தொழிற்சங்கம்🚩
தத்துவத்தை மெய்ப்பிப்போம்🚩
அதிரட்டும் பாரதம்....
ஆர்ப்பரித்து போராடு🏇🏽
 அதோ...அருகில்..
வெற்றிக் கோப்பை🏆🥇🥈🏅🎗🎖🏵
களத்தில்....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக