தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 6 செப்டம்பர், 2018

மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை அமலாக்காதது தொடர்பாக BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

BSNL நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் தொடர்பான முக்கியமான பிரச்சனைகளின் மீது மத்திய தொலை தொடர்பு அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள் அமலாக்கப்படாதது தொடர்பாக புது டெல்லியில் 04.09.2018 அன்று நடைபெற்ற மத்திய செயலக கூட்டம் தனது ஆழ்ந்த அதிருப்தியை தெரிவித்துக்கொண்டது. 24.02.2018 அன்று AUAB தலைவர்களை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் சந்தித்த போது 3வது ஊதிய மாற்றத்தை BSNL ஊழியர்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவைக் குறிப்பை மத்திய அமைச்சரவைக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்திற்கு தேவையானவற்றை செய்வதாகவும் உறுதி அளித்தார். ஓய்வூதிய பங்கீடு தொடர்பாக மத்திய அரசாங்க உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என தொலை தொடர்பு துறை செயலாளருக்கு வழிகாட்டினார். மேலும் BSNL நிர்வாகம் கொடுத்துள்ள முன்மொழிவின் அடிப்படையில் BSNL நிறுவனத்திற்கு 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உறுதி மொழி அளித்தார். ஆனால் உறுதி மொழி கொடுத்து ஆறு மாத காலம் கடந்த பின்பும் அந்த பிரச்சனைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் தெரியவில்லை. மேலும் 24.02.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தொலைதொடர்பு துறை செயலாளரிடம் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசீலனைக் கூட்டம் நடத்தவும் உறுதி அளித்தார். ஆனால் AUAB தலைவர்களின் கடும் முயற்சிக்கு பின்னரும்கூட தொலை தொடர்பு செயலாளர் AUAB தலைவர்களின் சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கவில்லை. எனவே 24.02.2018 அன்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான வேகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய தொலை தொடர்பு அமைச்சரை இந்த மத்திய செயலகக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக