மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களை 30.11.2017 அன்று
பெங்களூருவில் உள்ள ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்கள் நேரில்
சந்தித்து நமது கோரிக்கை மனுவை வழங்கினார்கள். அந்த மனுவை வழங்கிய
தலைவரிடம் “ஊதிய மாற்றம் தருவதற்கு பணம் எங்கு இருக்கிறது?” என்று அமைச்சர்
கேள்வி கேட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் நிதி நிலைமை
சரியில்லை என்றும், இதில் உதவி செய்யும் நிலையில் அரசாங்கமும் இல்லை
என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பதில் அரசாங்கத்தின் மன நிலையை
நமக்கு தெளிவாக தெரிவிக்கிறது. டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில்
நாம் நடத்த உள்ள இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் ஊதிய மாற்றம் நமது உரிமை என
நாம் கொண்டுள்ள உறுதியை அரசுக்கு மிகத் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும்.
இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக ஆக்குவோம். நமது கோரிக்கையை
வென்றடைவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக