தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 6 அக்டோபர், 2017

தகவல்கள் நமது மாநில தலைவர் தோழர் .எஸ்.செல்லப்பா அவர்கள் ,சொந்த நிமித்தம் காரணமாக தமது 3 மாத கால வெளிநாட்டுபயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பி இருக்கிறார்.அவரை தோழமையுடன் வரவேற்கிறோம்

  ========================================================
லோக்கல் கவுன்சில் அக்டோபர் 25 லிருந்து 28 ம் தேதிக்குள் லோக்கல்கவுன்சில் நடைபெற உள்ளது. PRE  –கவுன்சில் அக்டோபர் 23 அல்லது 24 ல் நடத்திட மாவட்ட சங்கம் திட்டமிட்டுவருகிறது.தோழர்கள் தயாரிப்புடன் பங்கேற்க வேண்டுகிறோம்
========================================================


நவம்பர் 09-முதல் 11 வரை அனைத்து சங்கங்களின் சார்பாக தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்திற்கு 15 தோழர்கள் என கோட்டா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே இது பற்றி தகவல் தெரிவித்திருந்தோம்.இன்று இரவுக்குள் கிளைச்செயலர்கள் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்பவர் பெயர் பற்றிய தகவல்கள உடனடியாக மாவட்ட செயலரிடம் தெரிவிக்கவும்.
 -====================================================


அக்டோபர் 21 அன்று விரிவடைந்த மாநில செயற்குழுவும்,நவம்பர் புரட்சி தின கருத்தரங்கமும் மதுரையில் நடைபெறுகிறது.மாநில செயற்குழுவில் கிளைச்செயலர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் பங்கேற்கலாம்.மதியம் 3 மணி அளவில் நடைபெறும் கருத்தரங்கத்தில் பங்கேற்க கோவை பகுதியில் 50 பேர் கோட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அனைத்து கிளைகளும் தங்களின் பிரதிநிதித்தவத்தையும்,பங்கேற்பதையும் உறுதிப்படுத்த வேண்டுகிறோம்

=========================================================


மதுரையில் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ள தீண்டாமை ஒழிப்புமுன்னனியின் அகில இந்திய மாநாட்டிற்கு நம் மாவட்டத்திற்கு நன்கொடை கோட்டா ரூ 20000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர தர்மபுரி சாலை விபத்தில் பலியான தோழர்களுக்கு நிவாரண நிதி கேட்டு தர்மபுரி மாவட்ட சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.எனவே தலா குறைந்தபட்சம் ரூ. 50 உறுப்பினர்களிடம் வசுலித்து மாவட்ட சங்கத்திற்கு செலுத்திட தோழமையுடன் வேண்டுகிறோம்


=================================
 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக