தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 14 செப்டம்பர், 2017

துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 15.09.2017ல் சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டம்

துணை டவர் நிறுவனத்தை அனுமதியோம்-
15.09.2017 அன்று அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்

12.09.2017 அன்று கூடிய மத்திய அமைச்சரவை BSNLல் உள்ள 70,000 டவர்களை தனியாக பிரித்து புதியதாக ஒரு துணை டவர் நிறுவனம் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதுஇது BSNL நிறுவனத்தை சீரழிக்கும் முயற்சியே தவிர வேறு ஏதுமில்லைமத்தியில் ஆளும் அரசாங்கம் BSNL உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பதையே கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்அவர்களின் நோக்கத்தினை BSNLல் உள்ள அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து எதிர்த்து முறியடித்து வந்துள்ளோம்

    நேரடியாக BSNL தனியாருக்கு தாரை வார்க்க முடியாத மத்திய அரசு கொல்லைப்புற வழியாக தனியாருக்கு தாரை வார்க்க திட்டமிட்டுள்ளதுஅதன் அடிப்படையில் தான் BSNLல் உள்ள அதன் செல்வாதாராமாக திகழும் மொபைல் டவர்களை BSNL நிறுவனத்திடம் இருந்து தனியாக பிரித்து புதியதாக ஒரு நிறுவனம் அமைப்பது என்று முடிவெடுத்துள்ளது

    எனவே நாம் இது நாள் வரை போராடி பொதுத்துறை நிறுவனமாகவே பாதுகாத்து வந்துள்ள BSNL நிறுவனத்தை தொடர்ந்து பாதுகாத்திட மத்திய அரசின் இந்த புதிய துணை டவர் நிறுவனம் என்கிற திட்டத்தை முறியடிப்பது நம் அனைவரின் கடமையாகும்எனவே BSNLல் உள்ள அனைத்து ஊழியர் சங்கங்களும் அதிகாரிகள் சங்கங்களும் இணைந்து 15.09.2017 அன்று முதல் கட்டமாக அனைத்து கிளைகளிலும் சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளன

    தமிழகத்திலும் நாம் அனைத்து சங்கங்களும் ஒன்று பட்டு அனைத்து ஊழியர்களையும் ஒன்று திரட்டி 15.09.2017 ஆர்ப்பாட்டத்தை சக்தியாக நடத்திட வேண்டும் என்று தமிழ் மாநில சங்க்ங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.]\

எனவே கோவை மாவட்டத்திலும் அனைத்துச்சங்கங்களும் இணைந்த ஆர்ப்பாட்டம் கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் காலை 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. தோழர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக