தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

நன்றியும் பாராட்டும்


இந்த மாதம் 21-08-2017 திங்கள் அன்று  ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா உறுதியாக நடைபெறும் என எதிர்பார்தோம்.நிர்வாகத்தை தொடர்பு கொண்டோம். 28-08-2017 தேதி அன்றே நிதி கிடைக்கப்பெறும் எனினும்  சம்பதப்பட்ட ஒப்பந்ததாரரை அனுகி விரைவில் பட்டுவாடாவை உறுதி செய்கிறோம் என பதிலுரைத்தனர்.மாநில சங்கத்தை தொடர்பு கொண்டோம்.23-08-2017 முதல் குடிபுகும் போராட்டம் நடத்த  மாநில சங்கத்தின் வழிகாட்டலை பெற்றோம் .அதற்கான  ஆயுத்தங்களில் ஈடுபட்டோம்.நிர்வாகத்திற்கு எழுத்துபூர்வ போராட்ட அறைகூவல் 22-08-2017 அன்று தரப்பட்டது.அனைத்து கிளைகளுக்கும் நிர்வாகிகளுக்கும் முன்னனை தோழர்களுக்கும் குறுதகவல்கள் மூலம் தகவல் தரப்பட்டது.அனைத்து மட்டங்களிலும் இருந்தும் போராட்ட அறைகூவலுக்கு வரவேற்பு கிடைத்தது.மாவட்ட நிர்வாகம் பிரச்சனைகளை தீர்க்க தன் முயற்சிகளை தொடர்ந்த வண்ணம் இருந்தது.அறிவித்தபடி 23-08-2017 புதன் அன்று PGM அலுவலகத்தில் அணிதிரண்டோம். காவல் துறை வந்ததது.பிரச்சனைகளை கேட்டது.வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றுகொண்டது.நேரம் செல்ல செல்ல வருகை அதிகம் ஆயிற்று.கோசங்கள் வெடிக்க துவங்கியது.மாவட்ட தலைவர்கள் தலைமையேற்க மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் எழுச்சிஉரையாற்றினார்.மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நமது தொடர்பில் இருந்தனர்.ஒரு கட்டடத்தில் அன்று மாலைக்குள் நிதி மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டு விடும் என்ற அதிகாரபூர்வ செய்தி தரப்பட்டது.போராட்டத்தை விளக்கி கொள்ள வேண்டுகோள் விடப்பட்டது.தகவலை மாநில செயலரிடம் தெரிவித்தோம்.ஆனால் மாநில மட்டத்தில் எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.எனவே நமது போராட்டம் அலுவலகத்திலேயே உணவு தயாரிப்பது என்று அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டது.செய்தியாளர்கள் குவிந்தனர்.வாழ்த்துரைக்க LIC  மற்றும் AIBDPA தலைவர்கள் பங்கேற்றனர்.மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி தொடர்ந்த வண்ணம் இருந்தது.உண்டு ,உறைவிடம் என்ற போராட்டத்தை தீவிரப்படுத்த தயாரானோம்..கோவை PGM  அழைத்து பேசினார்.வேண்டுகோள் விடுத்தார்.நிதி அணுப்பப்பட்டுவிட்டுதாக நம் முன்னேயே டெல்லியில் பேசி உறுதி செய்தார்.டெல்லி ஒப்பந்ததாரரிடம் தொடர்பை உருவாக்கி பட்டுவாடாவை உறுதிப்படுத்த வைத்தார். ஒரு கட்டத்தில் மாநில சங்க வழிகாட்டல் இல்லாமல் போராட்டம் வாபஸ் இல்லை என்ற நிலையை நாம் தெரிவித்த போது ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நம் மாநில செயலரோடு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.தவிர மாநில மட்ட கணக்கியல் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு தலையீட்டு தீர்க்க வேண்டுகோள் விடுத்தார்.ஒருமணி நேரத்திற்கும் மேல் இந்த நிலை நீடித்தது.PGM அவர்களின் முயற்சி தொடர்ந்து வண்ணம் இருந்தது.இறுதியில் மாநில நிர்வாகம் நம் மாநில செயலரிடம் தொடர்பு கொண்டு 24-08-2017 அன்று பட்டுவாடா உறுதி என்பதை தெரிவித்த பின்னனியில் நமது போராட்டத்தை கைவிட மாநில சங்கம் நமக்கு வழிகாட்டல் தந்தது.PGM அறையில் இருந்தபடியே அத்தனை நிகழ்வுகளும் நடைபெற்று நமது நன்றிகளை நம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து பின் போராட்டத்தை ஊழியர்கள் மத்தியிலேயே விளக்கி பேசி வாபஸ் பெற்றோம்.
தோழர்களே  நம்மிடம் தெரிவித்தபடி 24-08-2017 அன்று மாலைக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள பட்டுவாடா நடைபெற்றுள்ளது.இன்றும் மாவட்ட நிர்வாகம் நம்மை தொடர்ந்து தொடர்பு கொண்டு நிகழ்வுகளை தெரிவித்த வண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகிறோம். துவக்கம் முதல் போராட்ட களத்தில் துடிப்புடன் செயல்பட்ட பங்கேற்ற அனைத்து தோழர்களையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம்.பிரச்சனையை CMD வரை கொண்டு சென்ற நம் பொதுச்செயலர் தோழர்.பி.அபிமன்யூ அவர்களுக்கும், நம் மாநிலசெயலர்கள்  தோழர்கள். அ.பாபுராதாகிருஷ்ணன், சி.வினோத் அவர்களுக்கும்,கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும் குறிப்பாக நமது PGM அவர்களுக்கும் நம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஒற்றுமை வென்றது இதில் மனிதாபிமானம் கைகோர்த்துக்கொண்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக