தோழர்களே சம்பள பிரச்சனை ஒரு தொடர்கதையாகிவிட்டது.முதல்வாரத்தில் சம்பளபட்டுவாடா தாமதமானல் உடனடி எதிர்ப்பு நடவடிக்கை என்ற நிலையை TNTCWU தமிழ்மாநில சங்கம் அறிவுறுத்தி உள்ளது.இந்த அடிப்படையில் ஜீலை மாத சம்பளத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 8 தேதி DE மட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.TNTCWU வின் நிர்வாகிகள் கூட்டம் கூடி சில போராட்டதிட்டங்களுக்கு முடிவெடுத்தது. 09-08-2017 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் ,10-08-2017 அன்று கோவை PGM அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்,14-08-2017 அன்று கோவை மெயின் தொலைபேசி நிலையத்தில் மாலை நேர தர்ணா,16-08-2017 அன்று நிர்வாகிகள் உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்டது.அனைத்து இயக்கங்களும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. மாநில சங்கத்தின் தலையீடும் கோரப்பட்டது.சம்பள பிரச்சனையுடன் இதர ஒன்பது முக்கிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.பிரச்சனை அகில இந்திய மட்டத்திற்கும் எடுத்துச்செல்லப்பட்டது.பொதுச்செயலர்.கார்ப்பரேட் அதிகாரிகளுடன் பேசி ரூ.7 கோடியை தமிழகத்திற்கு பெற்றுத்தந்துள்ளார்.இன்று 19-08-2017 அன்று சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர்களுக்கு இது வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.21-08-2017 அன்று அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள பட்டுவாடா உறுதி செய்யப்பட்டுள்ளது
.உறுதியாக போராடிய ஒப்பந்த ஊழியர்களுக்கும்,அதன் நிர்வாகிகளுக்கும், BSNLEU வின் தோழர்களுக்கும் தலையீட்டு தீர்த்துவைத்த தமிழ்மாநில சங்கம் மற்றும் மத்திய சங்கத்திற்கு வாழ்த்துக்களையும்,நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.நிதி பற்றாக்குறை இருந்த நிலையில் போராட்டத்திற்கும் 12-08-2017 அன்று கோவையில் நடைபெற்ற TNTCWU தமிழ்மாநில செயற்குழுவிற்கும் நன்கொடை வழங்கிய அனைத்து தோழர்,தோழியர்களுக்கும் நெஞ்சு நிறை நன்றி
போராட்ட புகைப்படங்கள் வெளியிடவும்
பதிலளிநீக்கு