தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 30 டிசம்பர், 2016

பொதுச்செயலரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ரிலையன்சுக்கு விளம்பரத் தூதராக இருக்கிறார் மோடி


http://epaper.theekkathir.org/epapers/1/1/2016/12/30/files/News_193351.jpg

சென்னை, டிச. 29-
பி.எஸ்.என்.எல். எம்ளாயீஸ் யூனியன் 8வது அகில இந்திய மாநாடு டிசம்பர் 31ம் தேதி துவங்கி ஜனவரி 3ம் தேதி வரை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.அபிமன்யூ வியாழனன்று (டிச. 29) செய்தியாளர்களிடம் கூறியதாவது:அகில இந்திய தலைவர் பல்பீர் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர்- மேலாண் இயக்குநர் அனுபம் ஸ்ரீவஸ்தவா, பி.எஸ்.என்.எல். மனிதவளத் துறை இயக்குநர்சுஜாதா டி.ரே மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளோம்.கடந்த 7 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்த இந்நிறுவனத்தை வளரவிடாமல் முடக்கியது அரசுதான் என்றுஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தது உண்மை. 2007ஆம் ஆண்டுமுதல் 2013ஆம் ஆண்டு வரை நெட் ஒர்க்குக்கு தேவையான கருவிகளை வாங்க விடாமல் அரசு தடுத்தது. 4.5கோடி புதிய செல்போன் இணைப்புகள் வழங்குவதை அமைச்சராக இருந்த .ராசா தன்னிச்சையாக ரத்து செய்தார்.
அதேபோல் 2010ஆம் ஆண்டு 9 கோடி இணைப்புகளுக்குத் தேவையான புதிய கருவிகள் வாங்குவதை உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.8,300 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரிகள் - ஊழியர்கள் இணைந்து செயல்பட்டதன் காரணமாக 2015-16ஆம் ஆண்டு 3,000 கோடி ரூபாயாக குறைந்தது. இந்நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக தனியார் நிறுவனங்களை பாஜக அரசு மேம்படுத்துகிறது. இதற்கெதிரான பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். நிறுவனத்தின் சரிவைத்தடுக்க அதிகாரிகளும் ஊழியர்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பேருந்துநிலையங்கள், சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சிம் கார்டுகளை விற்பனை செய்தோம். ஒரு நிறுவனத்தில் இருந்து அதே எண்ணில் மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் திட்டத்தில் 3.2 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியிருக்கிறார்கள்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கிறார் பிரதமர் மோடி. ஒட்டுமொத்த அரசுஇயந்திரமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. இலவச ஜியோ சிம் வந்த பிறகு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு எந்தநஷ்டமும் இல்லை. மாதா மாதம் இணைப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஜியோவை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்தமாதம் மட்டும் பி.எஸ்.என்.எல். 2 லட்சத்து 50 ஆயிரம் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஜனவரி 1ம் தேதி முதல் 350 ரூபாய் கட்டணத்தில் இலவச வாய்ஸ் கால் மற்றும் 1 ஜிபி டேட்டா வழங்க உள்ளது. தற்போது புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
புதிதாக 20 ஆயிரம் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.அரசின் கொள்கைகளுக்கு எதிராகபோராடும் அதே நேரத்தில் இந்நிறுவனத்தைப் பாதுகாக்க தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருகிறோம். நிரந்தரத் தொழிலாளர்கள் 2.25 லட்சம் பேரும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1 லட்சம் பேரும் வேலை செய்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலி 90 விழுக்காடு இடங்களில் அமலாகவில்லை.
ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகையை ஒப்பந்ததாரர்கள் செலுத்தவில்லை.இந்த மாநாட்டில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலை குறித்தும், மென்மேலும் நிறுவனத்தை வலுப்படுத்துவது குறித்தும், 2017ஆம் ஆண்டு அமல்படுத்த வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளோம்.
சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் .கே.பத்மநாபன் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். வரவேற்புக் குழு தலைவர் டி.கே.ரங்கராஜன் எம்பி,மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அகில இந்திய செயலாளர் எம்.கிருஷ்ணன், அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.ரமேஷ், அகில இந்திய ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் கே.ஜி.ஜெயராஜ், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் அனிமேஷ் மித்ரா உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்ற உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின் போது மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பா, உதவிச் செயலாளர் எஸ்.சுப்ரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
(.நி)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக