தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு சிறந்த
மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற
செய்தி மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அரசியலிலும்,
இந்திய அரசியலிலும் ஆளுமை மிக்க தலைவராக
திகழ்ந்திருக்கிறார். அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட எண்ணற்ற சவால்களை
நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டவர். தமிழகத்தினுடைய மாநில உரிமைகளை பெறுவதில் போராடி
வெற்றி கண்டவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருடைய மறைவிற்கு கோவை
மாவட்ட BSNL ஊழியர் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்
கொள்கிறோம்.
அவரைப் பிரிந்து வாடக் கூடிய லட்சோப லட்ச அண்ணா திராவிட
முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை உரித்தாக்குகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக