தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

வெற்றிகரமாக்குவோம் பட்டினிப்போரட்டத்தை

மாவட்ட சங்க சுற்றறிக்கை எண் 42 <<  படிக்க >>


தேங்கியுள்ள பிரச்சனைகளின் தீர்விற்காக நாடு தழுவிய பட்டினிப்போராட்டம்
அறிக்கை எண்        42                                                                                             18-09-2016
  தோழர்களே !
   ஊழியர்களின் நியாயமான24 முக்கிய பிரச்சனைகளின் தீர்விற்காக நமதுமத்தியசங்கம், நமது கூட்டணி சங்கங்களான BSNLMS மற்றும் SNATTA ஆகியசங்கங்களுடன் இணைந்து ஒரு மூன்று கட்ட போராட்டங்களுக்கானஅறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்அடிப்படையில் 17.08.2016 அன்று சிவப்பு ரிப்பனுடன் கூடிய அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் என்று அறை கூவல் விட்டிருந்தது. நம் மாவட்டத்திலும் இந்த ஆர்ப்பாட்டமும், அதனை தொடர்ந்து 08.09.2016 அன்று நடைபெற்ற தர்ணா போராட்டமும், மிக சக்தியாக நடந்துள்ளது.  அதில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் கோவை மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்.அடுத்தகட்ட போராட்டமாக  20.09.2016 அன்று இந்திய முழுவதும் மாவட்ட, மாநில மற்றும் அகில இந்தியதலைநகர்களில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற உள்ளது.  நிர்வாகம் நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனாலும் நம் நமது போராட்ட தயாரிப்புகளை எந்த ஒரு சுணக்கமும் இன்றி செய்துவருவோம்.
 BSNL லின் வருமானம் உயர்ந்துள்ளது. செயல்பாட்டு லாபம் அதிகரித்துள்ளது.எனவே சம்பள உடன்பாடும் , போனசும் நியாயமாக தரப்பட வேண்டும். பல முறை விவாதித்தும்  ஏற்றுக்கொள்ளப்பட்ட  பல கோரிக்கைகள்  உத்தரவிடப்படவில்லை. நியாமன பல கோரிக்கைகளும் இழுத்தடிக்கப்படுகின்றது.எனவே வலுவான போராட்டம் அவசியமாகிறது. 20-09-2016 அன்று கோவை டெலிகாம் பில்டிங்கில் நடைபெறும் இந்த பட்டினிப் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று சக்தி வாய்ந்ததாக நடத்திக்காட்டி, வெற்றிகரமாக்க வேண்டுகிறோம்.
உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து  OUT SOURCING  மற்றும்  GCS  டெண்டர் பற்றி  விவாதிக்க வேண்டி உள்ளதால் கிளைச்செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம்
கோரிக்கைகள்
1)  01.01.2017 முதல் அமுலாக்கப்பட வேண்டிய ஊதியமாற்றத்திற்கான பேச்சுவார்த்தையை உடனே துவங்கிடுக.
2)  புதிய PLI பார்முலாவை உருவாக்கு.  ஆயுத பூஜாவிற்கு முன்தற்காலிக PLI ஆக குறைந்தபட்சம்  ரூ.7,000/- வழங்கிடுக.
3) ஒவ்வொரு ஆண்டும் தேக்கநிலை ஊதியம் வழங்கி ஊதிய தேக்கத்திற்கு முடிவுகட்டிடுக.
4) NEPPயில் நிர்வாகம் உருவாக்கிய சிரமங்களுக்கு தீர்வு கண்டிடுக
5) 01.10.2000 முதல் உள்ள அனாமலிகளை உடனே தீர்வு கண்டிடுக.
6) HRA  உள்ளிட்ட அலவன்ஸ்களை 78.2% IDA அடிப்படையில் வழங்கிடுக.
7) SC/ST ஊழியர்களுக்கு DoP&T உத்தரவுபடி அனைத்து பதவி உயர்வு தேர்வுகளிலும் தகுதி மதிப்பெண்களை குறைத்திடுக.
8)  BSNL நிர்வாகக்குழுவால் ஏற்றுக் கொண்ட 01.01.2007க்கு பின் பணியமர்த்தப்பட்டு விடுபட்ட கேடர்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வு தொகை, நேரடி நியமன ஊழியர்களுக்கான ஓய்வூதிய பங்கு, E1 ஊதிய விகிதம் மற்றும் காசுவல் ஊழியர்களுக்கு பணிக்கொடை ஆகியவற்றை உடனே ஏற்றுக்கொள்க.
9)  விடுபட்ட கேடர்களுக்கான பெயர் மாற்றம்.
10)      PLI, LTC மற்றும்மெடிகல் அலவன்ஸ்களை மீண்டும் வழங்கிடுக.
11)      காலிப்பணியிடங்கள் உள்ள மாநிலங்களில் கார்ப்பரேட் அலுவலக உத்தரவுபடி  2013 JTO மற்றும் சமீபத்தில் நடைபெற்ற JTO/JAO,TTA/TM LICE தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்திடுக.
12)      SC/ST BACKLOG காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக.
13)      டெலிகாம் ஃபேக்டரிகளை புத்தாக்கம் செய்திடுக.
14) JTO/JAO/JE/TT தேர்வுகளை எழுதுவதற்கு நிர்ணயித்துள்ள தகுதிக்கட்டுப்பாடுகளை தளர்த்துக.
15)      01.01.2007 முதல் 09.06.2013 வரையிலானகாலத்திற்கான 78.2% IDA இணைப்பு நிலுவையினை உடனே வழங்குக.
16)       DOTயில் பயிற்சியை துவங்கி BSNLல் முடித்த தோழர்களுக்கு ஜனாதிபத்திய உத்தரவை உடனே வழங்குக.
17)      தகுதியான ஊழியர்களை MT தேர்வு எழுத அனுமதித்திடுக.
18)      Sr.TOA /TM/ Driver உள்ளிட்ட கேடர்களுக்கு ஊதியவிகிதத்தை மாற்றிக்கொடு.  அதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியை புனரமைத்திடுக.
19)      கால்செண்டர்களை BSNL ஊழியர்களை கொண்டே நிர்வகிக்க வேண்டும்.  OUTSOURCING தேவையில்லை.
20)      விடுபட்ட காசுவல் மஸ்தூர்களையும், TSM களையும், ஒப்பந்த ஊழியர்களையும் நிரந்தரம்செய்க. 
21)      காசுவல்மஸ்தூர், TSMமற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை அவர்கள் செய்யும் பணிகளை செய்யக்கூடிய நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக உயர்த்திக் கொடுத்திடுக.
22)      குறைந்தபட்ச ஊதியம், EPF, ESI உள்ளிட்ட தொழிலாளர் நலசட்டங்களை காசுவல் மஸ்தூர், TSM மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அமுல்படுத்துக.
23)      IDA ஊதியவிகிதத்தின் அடிப்படையில் காசுவல் மஸ்தூர், TSM மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்க. 
24)      புதியதாக ஆளெடுப்பு நடத்துக.
தோழமையுடன்

சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக