தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 28 ஜூன், 2016

திருப்பூர் K.P புதூர் கிளை பொதுக்குழு

திருப்பூர் K.P புதூர் கிளையின் பொதுக்குழுக்கூட்டம் இன்று (28-06-2016) நடைபெற்றது.கூட்டத்தில் மாநில துணைத்தலைவர். தோழர்.வி.வெங்கட்ராமன் அவர்களும்,மாநில அமைப்புசெயலர். தோழர்.முகமது ஜாபர் அவர்களும்,மாவட்ட பொருளர்.மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கூட்டத்தில் மாநில துணைத்தலைவர். தோழர்.வி.வெங்கட்ராமன் அவர்களுக்கு பணி ஓய்வை முன்னிட்டு  முன்னனி தோழர்கள், திருப்பூர் கிளைகளின் சார்பில் பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் சால்வைகள் அணிவித்தும் ,புத்தகங்கள் அளித்தும்  பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.பின்பு சிறப்புரை ஆற்றிய தோழர்.வி.வெங்கட்ராமன் தனது தொழிற்சங்க பணிகளில் தோழர்களின் பங்களிப்பை  பற்றியும்,மாநில செயற்குழு முடிவுகளை பற்றியும் ,அகில இந்திய மாநாட்டு பணிகளில் நமக்கு உள்ள பணிகளை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். கூட்டத்தில் K.P புதூர் கிளையின் பொருளர். தோழர்.அற்புதராஜ் பணி மாறுதல் காரணமாக சென்றுள்ளதால் அவரை பாராட்டி மகிழ்விக்கும் விதத்தில் தோழர்.வி.வெங்கட்ராமன் அவர்கள் தோழர்.அற்புதராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.அகில இந்திய மாநாட்டிற்கு தங்களது கிளையின் சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.50,000/- ரூபாயை முழுவதுமாக தருவதற்கு உடனடியாக கிளை உறுப்பினர்கள் உத்திரவாதம் அளித்தனர்.இறுதியாக கிளைப்பொருளர்.தோழர்.அற்புதராஜ் அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக