தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

7 வது சங்க அங்கீகாரத் தேர்தல்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மே 10 ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய வளாகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் சிறப்புப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மெயின் கிளைத் தலைவர் கே.வாலீசன் தலைமை வகித்தார். எக்ஸ்டர்னல் கிளைச் செயலாளர் கே.விஸ்வநாதன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா பங்கேற்று பிஎஸ்என்எல் நிறுவன நிர்வாகத்தின் தற்போதைய செயல்பாடு, ஊழியர் சங்கம் மேற்கொண்ட நிலைபாடு மற்றும் போராட்டங்கள், எதிர்காலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை வெற்றிகரமாக கோரிப் பெறுவதற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தை அங்கீகாரத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன் விளக்கிப் பேசினார்.
150 க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக அவிநாசி கிளை சார்பில் கே.கணேசன் நன்றி கூறினார். அங்கீகாரத் தேர்தல் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய உதவிப் பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா பிஎஸ்என்எல் ஊழியராக பணியாற்றி விரைவில் பணி நிறைவு பெற உள்ள ஆறு பேருக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக