அகமது நகரில் நடைபெற்ற விரிவடைந்த மத்திய செயற்குழுவின் முடிவு மற்றும் வேலூரில் நடைபெற்ற மாநில விரிவடைந்த செயற்குழுவின் முடிவுகளின் படி கோவையில் மார்ச் 9 முதல் 11 வரை சுந்தரபுரம், மலுமிச்சம்பட்டி, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மேளாக்களில் பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பையையும் ,ஆதரவையும் காண முடிந்தது. மேளாவில் மாவட்ட நிர்வாகிகள் சி.ராஜேந்திரன்,செள.மகேஸ்வரன், எம்,சதீஸ், பி.எம்.நாச்சிமுத்து, எம்.மதனகோபாலன் மற்றும் கிளைச்செயலர்கள் T.A.பழனிச்சாமி,லோகநாதன், சசிதரன் மற்றும் முன்னை தோழர்கள் சரவணக்குமார்,யாக்கூப் ஹைசைன், முருகன், சுப்பிரமணியம்,முன்னனி தோழர்கள் மூன்று நாட்களும் பங்கேற்றனர். மேளாவில்
சிம்கார்டுகள் 766 ம் , MNP - 33 ம், LL with BB -25 ம் விற்பனை செய்யப்பட்டது. மேலும் 60 LL இணைப்பு கேட்டு கோரிக்கையும் மக்களிடம் வந்தது. மேளாவில் உடனுக்குடன் சிம்கார்டுகளுக்கான எண்கள் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த மாதிரி தேர்வு செய்யப்பட்டு, அங்கேயே ஆக்டிவேசன் (SPOT ACTIVATION ) செய்யப்பட்டது மக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது . ஏற்பாடுகளை செய்த குறிச்சி, போத்தனூர்,மதுக்கரை கிளைகளை மாவட்டச்சங்கம் பாரட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக