தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 25 ஜூலை, 2015

பீளமேடு கிளை நிர்வாகிகள் கூட்டம்

பீளமேடு கிளையின் நிர்வாகிகளின் கூட்டம் இன்று பீள்மேடு தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கிளைத்தலைவர் தோழர். மணி அவர்கள் தலைமை வகித்தார். கூட்டத்தில் கிளைப்பிரச்சனைகள், FORUM  அறைகூவல் ஆகியவைகள் விவாதிக்கப்பட்டன.குறிப்பாக சின்னியம்பாளையம் SDE அவர்களின் ஊழியர் விரோதப்போக்கு ,  FORUM  அறைகூவலின்படி இயக்கத்தை வெற்றிகரமாக்க கோட்டப்பொறியாளரை சந்தித்து தேவையான  உபகாரணங்கள்  பெறுவது என விவாதிக்கப்பட்டது. பணிஓய்வு பெற்ற கிளைச்செயலர்.தோழர்.செல்வராஜ் அவர்களின் வேண்டுகோளின்படி புதிய கிளைச்செயலராக தோழர்.முருகன்  TTA அவர்களை முன் மொழியப்பட்டு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். உதவிச்செயலராக தோழியர்.கல்பனா.TTA அவர்களும் தேர்வு செய்யபட்டார், அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.மேலும் ஆகஸ்ட் 7 ம் தேதி பீளமேட்டில் மாவட்டச்செயற்குழுவை நடத்த பீளமேடு கிளை விடுத்த வேண்டுகோளை மாவட்ட செயலர் ஏற்றுக்கொண்டார். தோழர்,செல்வராஜ் ,அவர்கள்  தன்பங்களிப்பாக செயற்குழுவை நடத்த ரூ.2,500 /-ஐ  மற்றும் ,கிளை, மாநில ,அகில இந்திய சங்களுக்கு தலா 500 /- ஐ நன்கொடையாக மாவட்ட பொருளரிடம் உடனடியாக தந்து  மாவட்டச்செயற்குழுவை சிறப்பாக நடத்த மற்ற தோழர்களிடம் தொகுப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மாவட்ட செயலர்.தோழர்.சி.ராஜேந்திரன், மாவட்ட பொருளர்.தோழர்.மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக