தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 22 மே, 2015

வீரம் செறிந்த போராட்டம்

தொழிலாளர்கள்   பொங்கி எழுந்தால்  !  தொழிற்சங்க போராட்டம் தோற்றதில்லை ! 

2 வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதப்போராட்டம் மாநில செயலர்  தோழர். பாபுராதாகிருஷ்ணன் தலையீட்டால் நிர்வாகத்திடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அனைத்து கோரிக்கைகளிலும் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. பிரச்சனைகளில் தீர்வு காண்பதற்கு வழிகாட்டிய அகில இந்திய உதவிப்பொதுச்செயலர். தோழர்.செல்லப்பா , அவர்களுக்கும், மாநில செயலர். தோழர். பாபுராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில செயலர். தோழர்.வினோத் அவர்களுக்கும்,  மாநில சங்க நிர்வாகிகளுக்கும் , மாவட்ட சங்கத்தின் நன்றியை உரித்தாக்குகின்றோம். மேலும் பிரச்சனையில் சுமூக உடன்பாடு எட்ட ஒத்துழைத்த மாவட்ட நிர்வாகத்திற்கும், விடுப்பு எடுத்துக்கொண்டு தொழிற்சங்க போராட்டத்தை வலுப்படுத்திய அனைத்து தோழர், தோழியர்களுக்கும் நன்றி , நன்றி  நன்றி
 மேலும் உடன்பாடு பற்றிய விபரங்கள் அறிக்கையாக விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக