K.P.புதூர் கிளையின் பொதுக்குழுக்கூட்டம் இன்று வீரபாண்டியில் நடைபெற்றது.கிளைத்தலைவர் தோழர். வின்செண்ட் தலைமை வகித்தார்.கிளைச்செயலர் தோழர். ஜோதீஸ், பிரச்சனைகளின் மேல் தொகுப்புரை வழங்கினார்.எதிர்வரும் போராட்டங்களில் நம் தோழர்களின் பங்கேற்பை வலுவாக பதிவு செய்யவேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார். மாவட்ட பொருளர்.தோழர்.செள.மகேஸ்வரன், நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவுகளை தெரிவித்து பேசினார். வீரபாண்டி பகுதியில் உள்ள அனைத்து தோழர்களும் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தது சிறப்பாகும். இறுதியில் கிளையின் அமைப்புச்செயலர். தோழர்.எஸ்.தங்கவேலு நன்றி கூறி முடித்து வைத்தார்
பின்பு வீரபாண்டி தொலைபேசி நிலையத்தின் துணைக்கோட்ட அதிகாரியை கிளைத்தலைவர். வின்செண்ட், கிளைச்செயலர். ஜோதீஸ்,மாவட்ட பொருளர்.தோழர்.செள.மகேஸ்வரன் ஆகியோர் சந்தித்தனர். அப்பொழுது ஊழியர் தரப்பு பிரச்சனைகளையும், சேவையின் தரத்தை மேம்படுத்தவும் ஊழியர்களுக்கு தேவையான கருவிகளை வழங்க மேல்மட்டத்தில் எடுத்துகூறுவதாக தெரிவித்தார் . மேலும் ஊழியர்களிடம் இணைந்து பணியாற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக