தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 3 ஜனவரி, 2015

" கொரியன் கொத்தடிமைகளா நாம்! "



Gowri Sankar Hmieu's photo.Gowri Sankar Hmieu's photo.Gowri Sankar Hmieu's photo.



" கொரியன் கொத்தடிமைகளா நாம்! "
பன்னாட்டு நிறுவனங்களில் இந்திய தொழிலாளர்கள் நிலை என்னவென்பதை இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள NVH நிறுவன கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இச்சூழலில் தொழிலாளர்களான எங்களது போராட்டங்களை தவறான கண்ணோட்டத்திலேயே காணும் அனைவரிடமும் ஒரு கேள்வி? ' இப்போது நாங்கள் என்ன செய்யவேண்டும்?'
#
அந்நிய முதலாளி இந்திய சட்டங்களை புறக்கணித்தாலும், தொழிலாளர்களை விலைக்குவாங்கிய இயந்திரமாய் கண்டாலும் நிலையாணையை தூக்கிக்கொண்டு அவர்களுக்கு துணையாய் நிற்கும் இந்திய நிர்வாக அதிகாரிகளே! உங்கள் விலை என்ன?
#
மாருதி நிறுவனத்தில் விசாரணையின்றி தொழிலாளர்களை குற்றவாளிகளாக சிறையில் வருடக்கணக்கில் வைத்துள்ள நிலையில், முதலாளிகளுக்கு ஆதரவாக நாடு முழுக்க அலை உருவாக்கிய ஊடகங்களே! தற்போது எங்கே சென்றது தங்களது உண்மைச்(??)செய்திகள்?
#
தொழிலாளர் நலத்துறை என்ற பெயரில் முதலாளி வளத்துறையாக இயங்கும் அரசு இயந்திரமே! நாங்கள் என்ன செய்யவேண்டும்?
#
அந்நிய மூலதனத்திற்காக நாட்டையே அடமானம் வைத்தாலும் அலட்டாமல் வளர்ச்சியெனக்கூறும் அரசே! தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைத்தனம் தான் நீ விரும்பும் வளர்ச்சியா?
#
அந்நிய நிறுவன அதிகாரி கூறுவதே காவல்துறை சட்டமாய் உடனே நிறைவேற்றும் காவல்துறையே! ஒரு கொரியனை தொழிலாளி தாக்கியிருந்தால் தூக்கு தண்டனை வாங்கிதரும் வரை ஓய்ந்திருப்பாயா?
#
நிலமும், கட்டடமும் வளர்ச்சி என எண்ணியிருக்கும் பொதுமக்களே! நோக்கியா வெளியேறியபின் உங்கள் கட்டடத்தின் மதிப்பெண்ண?
தோழர்களே! அந்த கொரியனை தொழிலாளி தாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அறிவோம். ஆனால் அமைகாத்தால்,நம் பெற்றோர் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதாக நம்மை ஆலைக்கனுப்பி வீட்டில் எண்ணியிருக்கலாம். ஆனால் நம் மூதாதையர் அந்நியனிடம் அடிமைப்பட்டதை அறிந்தநாம் நம் பிள்ளைகளை அவ்வாறே விட்டுவிடும் துரோகம் இழைத்திடுவோம்! NVH நிறுவனத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான தோழர்களுக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான தோழர்கள் தோள்கொடுக்கும் தோழனாக துணைநிற்க HMIEU அழைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக