தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 14 ஜனவரி, 2015

சிம் கார்டு பற்றாக்குறை; ஒப்பந்த ஊழியருக்கு சம்பளம் இல்லை பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்





அலைபேசி சேவைக்கு வழங்கும் சிம்கார்டு பற்றாக்குறையை போக்க வலியுறுத்தியும், ஒப்பந்த ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பள நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் மொபைல் சேவை வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையின்றி சிம் கார்டு வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் துணை நிறுவனம் உருவாக்கத்தை கைவிட வேண்டும். 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் துவங்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல்-ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் முதல் வாரத்தில் சம்பளம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் உள்ளிட்டவைகளின் சார்பில் செவ்வாயன்று பல்வேறு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருப்பூரில் பிஎஸ்என்எல் தலைமை தொலைபேசி நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்கத்தின் கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். இதில் சங்க கிளைச் செயலாளர் ஜோதீஸ், ஒப்பந்த ஊழியர் சங்க செயலாளர் ரமேஷ், மாநிலப் பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம் உள்பட பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.


கோவைகோவை சாய்பாபா காலனி தொலைப்பேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க கிளைத் தலைவர் பத்மாவதி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் என்.அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் கே.சந்திசேகரன் சிறப்புறையாற்றினார். நிறைவாக, காந்திபார்க் கிளை தலைவர் சுந்தரராஜன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக