தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

வெண்மணி தியாகிகள் நினைவு மருத்துவ முகாம்




வெண்மணி தியாகிகளின் 47வது நினைவு மருத்துவ முகாம் கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும் லலிதா மருத்துவமனை சார்பில் வெள்ளியன்று நடைபெற்றது.தஞ்சை மாவட்டம் கீழ் வெண்மணியில் கூலி உயர்வுக்காக போராடிய விவசாயத் தொழிலாளர்கள் தீயிட்டு கொன்று குவிக்கப்பட்டதன் 47வது ஆண்டு நினைவு தினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. இந்நினைவு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும் கோவை லலிதா மருத்துவமனை இணைந்து கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தியது.
இம்முகாமில் எலும்பு ஸ்கேன் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, மூட்டுவலிக்கு காரணமான ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
லலிதா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பி.சுந்தர்ராஜ், சிபிஎஸ்.சுமன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வி.சம்பத் தலைமை வகித்தார். மாநில உதவி தலைவர் கே.மாரிமுத்து முகாமினை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.
நிறைவாக மாநில உதவித் தலைவர் வி.வெங்கட்ராமன், மாவட்ட உதவி தலைவர் எம்.மதனகோபால் ஆகியோர் வெண்மணி தியாகிகள் குறித்து சிறப்புரை ஆற்றினர். பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக