தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 20 டிசம்பர், 2014

பழிவாங்கலை ஒரு போதும் அணுமதியோம்

அவினாசி  தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும்  நம்முடைய முன்னனி தலைவர்களில் ஒருவரான  தோழர். கணேசன் அவர்களை, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு நிர்வாகத்தின் தவறை தட்டிகேட்டதில் முன்னனியில் இருந்ததற்காக அவரை பழிவாங்கும் நடவடிக்கையாக எவ்வித கருத்தும் கேட்காமல் நிர்வாகம்  , அவரின் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.. நிர்வாகத்தின் தன்னிச்சையான சர்வதிகார போக்கை கண்டித்து   JAC [ NON Executive  ] யின் அனைத்து ஊழியர் சங்கங்களும் இணைந்து அவினாசியில் 19-12-2014 இன்று மாலை 5 மணிக்கு  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் NFTE – யின் மாவட்ட செயலர் தோழர். ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நடந்தது.  தோழர் விஸ்வநாதன்  வின்னைமுட்டும் கோஷமிட்டார். ஆர்ப்பாட்டத்தில்   BSNLEU வின் மாவட்ட செயலர் தோழர்.ராஜேந்திரன், BSNLEU வின் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் கே.மாரிமுத்து, வெங்கட்ராமன், சுப்பிரமணியம், NFTE  BSNL லின் மாவட்டத்தலைவர்  தோழர்.ஸ்ரீதரன், மாநில உதவிச்செயலர் தோழர். ராபர்ட், FNTO  மாவட்ட செயலர் தோழர். செளந்தராஜன், மாநில உதவிச்செயலர். தோழர்.தனபதி, ஆகியோர்  நிர்வாகத்தின் சர்வதிகார போக்கினைக்கண்டித்து எழுச்சியுரை ஆற்றினார்கள் . இறுதியாக  BSNLEU வின் மாவட்ட அமைப்புச்செயலர் தோழர். சதிஸ் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் கலந்து கொண்டார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக