வால்பாறை பகுதியில் டென்யீர் முடித்து வந்தவருக்கும், தொண்டாமுத்தூர்
பகுதியில் பணிபுரிந்து இடமாறுதல்களில் ஆர்.எஸ்
.புரம் பகுதிக்கு வந்தவர்களை முறையற்ற முறையில் ஆர்.எஸ். புரத்தில்
இருந்து மற்ற பகுதிகளுக்கு தன்னிச்சையாக போடப்பட்ட
டெலிகாம் மெக்கானிக் டெபுடேசனை ரத்து செய்யக்கோரி
சாய்பாபாகாலனி தொலைபேசிநிலையத்தின் முன்பு 22-09-2014 அன்று காலை 11-00 மணிக்கு
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர். கே. சந்திரசேகரன்,
சாய்பாபாகாலனி கிளைச்செயலர். தோழர். அன்பழகன், காந்திபார்க் கிளைச்செயலர். தோழர். தாளமுத்து ஆகியோர் உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 40
க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் பங்கேற்றனர். உரிய முறையில் பிரச்சனையை தீர்க்கவில்லை எனில் மேலும் போராட்டம் வலுப்பெறும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.. போராட்டத்தில்
ஈடுபாட்ட சாய்பாபாகாலனி மற்றும் ஆர்.எஸ்.புரம் கிளைத்தோழர்களுக்கு மாவட்டச்சங்கத்தின்
சார்பில் வாழ்த்துக்கள். மேலும் மாவட்ட சங்கம் இப்பிரச்சனையை மாவட்ட நிர்வாகத்திடம்
கொண்டு சென்று தீர்வு காணும் . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக