தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 3 ஜூன், 2014

பிச்சையெடுக்கும் போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பளம் நிலுவை -பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கண்டித்து பிச்சையெடுக்கும் போராட்டம்


-திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் இரவுக் காவலாளியாக வேலை செய்யும்ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாகசம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை பிரச்சனைதீரவில்லை. நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒப்பந்ததாரர்தான் சம்பளம் தர வேண்டும் என்றும், ஒப்பந்ததாரரைப் பொறுத்தவரை, பிஎஸ்என்எல் நிர்வாகம் பணம் தராததால் சம்பளம் தர முடியவில்லை என்றும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் இதனால் இரவுக்காவலாளி தொழிலாளர்கள் சொற்ப ஊதியமும் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.எனவே கடந்த வாரம்தமிழ்நாடு தொலைத்தொடர்புத் துறை ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் கண்ணில் கறுப்புத் துணி கட்டிஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன் பிறகும்திங்கள்கிழமை வரைஊதியம் வழங்கப்படவில்லை. விதிமுறைப்படி ஒப்பந்ததாரர் சம்பளம் தர வேண்டியிருந்தாலும், அவர் தொழிலாளர்களுக்கு பிரதிமாதம் 5ம் தேதிக்குள் சம்பளம் கொடுத்துவிட வேண்டும், அதை 7ம் தேதிக்குள் உறுதிப்படுத்தி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று ஒப்பந்த ஷரத்துஇருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை கண்டுகொள்ளாமல் இருதரப்பினரும் இழுத்தடித்து வருகின்றனர்.இந்நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக் கோரிதிங்களன்று மெயின் தொலைபேசி நிலையம்முன்பாக பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்துக்கு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க திருப்பூர் கிளைத் தலைவர் சாமியப்பன் தலைமை வகித்தார்.
கிளைச் செயலாளர் ரமேஷ், மாவட்டத் தலைவர் முத்துக்குமார், மாநிலப் பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.இவர்களது போராட்டத்தை ஆதரித்தும், கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.சுப்பிரமணியம், மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர், கிளைத் தலைவர் வாலீசன், கிளைச் செயலாளர் ஜோதீஸ் ஆகியோரும் உரையாற்றினர். இப்போராட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

1 கருத்து: