தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 22 மார்ச், 2014

அமைப்புதினம்

BSNLEU  சங்கத்தின் 14 வது அமைப்புதினத்தை முன்னிட்டு  கொடியேற்று விழா திருப்பூர் கே.பி.புதூர் கிளைக்கு உட்பட்ட வீரபாண்டி தொலைபேசி நிலையத்தில் 22-03-2014 காலை 10. மணிக்கு நடந்தது.  கிளையின் முன்னனித்தோழர்கள் அனைவரும் திரளாக  கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின்  கிளைஉதவித்தலைவர்  ஜிம்மி ஜோஸ் தலைமை வகித்தார். கிளையின் அமைப்புச்செயலர். மணி வரவேற்புரை ஆற்றினார். ஒப்பந்த ஊழியரின் கிளையின்  தோழர்.கண்ணையன் சங்கத்தின் கொடியை ஏற்றினார். BSNLEU  சங்கத்தின் தோழர். ஆறுமுகம் கோஷம் முழங்கினார். வீரபாண்டி தொலைபேசி நிலைய SDE திரு.M.சம்பத்குமார், அவர்கள் . வாழ்த்துரை வழங்கினார் .இறுதியாக தோழர்.அங்குராஜ் நன்றி கூறினார்.





திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் அங்க அமைப்புதினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருப்பூர் துனைப்பொதுமேலாளர் திரு.ராமசாமி வாழ்த்துரைவழங்கினார். மாநில உதவிச்செயலர் தோழர். சுப்பிரமணியன், மாநில அமைப்பு செயலர் தோழர். முகமது ஜாபர் சிறப்புரை ஆற்றினார்கள், மாவட்ட அமைப்புச்செயலர் தோழர்.ராமசாமி வரவேற்புரை ஆற்றினார். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக