புவனேஷ்வரில்
நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மத்தியசெயற்குழுவின் முடிவின் படியும்
, நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் ராஜ்கோட் மத்திய செயற்குழுவின்
அறைகூவலின்படியும் கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
*விடுபட்ட ஒப்பந்த/காசுவல்ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
*அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
*சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
*பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
*சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
*EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
*வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
*பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
*பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவைபகுதியில் 90 தோழர்களும், பொள்ளாச்சி பகுதியில் 50 தோழர்களும், திருப்பூர் பகுதியில் 60 தோழர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டங்களில் இரு சங்கங்களின் மாநில , மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக