தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 11 டிசம்பர், 2013

கே.ஜி.போஸ் நினைவுநாள்  ஒப்பந்த ஊழியர்களின் தமிழ் மாநில சங்க அறைகூவலின்படி K .G .போஸ் அவர்களின் நினைவு தினமான 11-12-2013 இன்று ஒப்பந்த ஊழியர்கள் வாங்கிய கையெழுத்து படிவத்தின் நகல் மாவட்ட நிர்வாகத்திடம்  நமது சங்க நிர்வாகிகள் சி.ராஜேந்திரன், என்.பி.ராஜேந்திரன், மற்றும் ஒப்பந்த ஊழியர்சங்க மாவட்டசெயலர். டி.ரவிச்சந்திரன், சண்முகசுந்தரம்  உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஏனைய நிர்வாகிகளும் சென்று துணைப்பொது மேலாளர் திரு .இரத்தினசாமி , அவர்களிடம் மணுவை அளித்தனர்.  அதை பெற்றுக்கொண்டு மாநில நிர்வாகத்திற்கு கோரிக்கையை எடுத்துச்செல்வதாக கூறினார். பின்னர் நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .சுமார் 200 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பங்கெடுத்த சிறப்புக்கூட்டம்  நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கும் . ஒப்பந்த ஊழியர்களுக்கு பாராட்டுக்கள்

 நினைவஞ்சலி கூட்டங்கள்
தோழர் கே.ஜி. போஸின் நினைவு நாளை முன்னிட்டு  திருப்பூர்,பல்லடம்,உடுமலை, பொள்ளாச்சி, கோவை மெயின் தொலைபேசி நிலையம், டெலிகாம் பில்டிங் ,சாய்பாப காலனி தொலைபேசி நிலையம் உள்ளிட்ட  இடங்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட தோழர்.கே.ஜி.போஸின் படத்திறப்பு விழா மற்றும் நினைவஞ்சலி கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  தோழர்களுக்கு பாராட்டுக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக