வேலை நிறுத்த ஆயுத்த கூட்டத்தை அனைத்து
கிளைகளிலும் நடத்த மாவட்ட சங்கம் அறைகூவல் விடுத்து இருந்தது.அதை முன்னிட்டு
மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்த ஆயுத்தக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி 23-09-2013 அன்று மாலை மேட்டுப்பாளையம் கிளையில் நடந்த ஆயுத்த
கூட்டத்திற்கு மாவட்டசெயலர். தோழர். சி.ராஜேந்திரன் . மற்றும் மாவட்டசங்க நிர்வாகி
ராஜராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
24-09-2013 அன்று காலை கிணத்துக்கடவு கிளையில் நடந்த ஆயுத்த
கூட்டத்திற்கு மாவட்டசங்க நிர்வாகி. தோழர். பி.தங்கமணி, மற்றும் எம்.ஜெயமணி
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
அதே போல் 24-09-2013 அன்று மாலை பொள்ளாச்சி கிளையில் நடந்த ஆயுத்த
கூட்டத்திற்கு மாவட்டசங்க நிர்வாகி. தோழர். என்.சக்திவேல், மற்றும் மாநிலச்சங்க
நிர்வாகி .தோழர். முகமது ஜாபர் ஆகியோர்
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்
மேலும்
24-09-2013 அன்று காலை திருப்பூர் கே.பி.
புதூர் கிளையின் வீரபாண்டியில் நடந்த
ஆயுத்த கூட்டத்திற்கு கிளைச்செயலர். தோழர்.ஜோதிஷ் மற்றும் மாநிலச்சங்க நிர்வாகி . தோழர். முகமது
ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை
ஆற்றினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக