தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 17 மே, 2016

தெளிவான கணக்கு போடு தோழா !

மாவட்ட அளவில்
வருடம்
2013
2016
மொத்த வாக்கு
1839
1352
bsnleu
1022
814
வாக்கு சதம்
55.57
60.2
+ 4.63
nfte BSNL
586
422
வாக்கு சதம்
31.86
31.21
-0.65


கோவையில் கடந்த மூன்று ஆண்டுகளாக  கோவை மாவட்டத்தில் 487  தோழர்கள் மாற்றலில் சென்றும், பணி ஓய்வு பெற்றும், பதவி உயர்வு பெற்றும்,இயற்கை எய்தும் உள்ளனர். இருந்தும் நம் மாவட்டத்தில் NFTE BSNL வின் வாக்கு சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வருவதை இந்த தேர்தலில் அதன் மாவட்டசெயலர் புலம்புவது தெளிவாக புலப்படுகிறது. கடந்த தேர்தலில் BSNLEU  உறுப்பினர்கள் 1047 . அதில் 244 பேர்  பணி மாற்றல், பணி ஓய்வு, பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்.  அது மட்டுமல்லாமல் அகால மரணம் அடைந்தவர்கள் சிலர். அதற்கான விபரங்கள் தேவையெனில் அதையும் தர  அளிக்க தயார். இத்தனைக்கும் பிறகும் இந்த தேர்தலில் நம் வாக்கு சதவிகிதம்  + 4.63 அதிகரித்துள்ளது. தனது செயல்பாட்டினால்  கடந்த தேர்தலில் ஒப்பிடும் பொழுது NFTE BSNL  வாக்கு சதவிகிதமோ - 0.65 குறைந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளுவதற்கு மனம் இல்லாமல் புலம்புவதினால் என்ன பலன். அகில இந்திய அளவில்,மாநில அளவில் ஒற்றுமையாக உள்ள பொழுது ஒரு இடதுசாரியாக இருந்து கொண்டு விமர்சனங்களை அள்ளி வீசுவதனால் என்ன பலன் கிடைக்கபோகிறது.இனியாவது சிந்தித்து ஒற்றுமையை கட்டுவீர் என எதிர்பார்க்கிறோம். இப்பொழுதும் எப்பொழுதும் கோவை  K.G.BOSE   அணியின் கோட்டையாக கோவை இருக்கும் என்பதை உணர்த்திய தோழர், தோழியர்களுக்கு நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக