தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 17 ஜனவரி, 2015

பொதுவாழ்வில் தூய்மையின் அடையாளம்



தோழர் ஜோதிபாசு இந்திய பொதுவுடைமை இயக்க வரலாற்றில் என்றென்றும் ஒளிவிடும் ஒரு பெயர். விடுதலைப்போராட்டக்காலத்தில் பொதுவாழ்வில் துவங்கிய அவரது பயணம், நாடு விடுதலைபெற்ற பின்பு மக்கள் நலனுக்காக அயர்வின்றி தொடர்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் ஜோதிபாசு, மேற்குவங்க மாநிலமுதல்வராக ஐந்து முறை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு 24 ஆண்டு காலம் அந்தப்பொறுப்பை அலங்கரித்தவர்.
ஊழலற்ற எளிமையும், நேர்மையும் நிரம்பிய பொது வாழ்க்கையின் அடையாளமாக திகழ்ந்தவர். மக்கள் மீது மாறாத அன்பு கொண்டவர். மக்களும்அவர் மீது இன்று வரை அளவற்ற அன்புகொண்டுள்ளனர். மதச்சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் ஆகியவற்றுக்காக சோர்வின்றிப் போராடிய அவரது பணி என்றென்றும் நினைவுகூரப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக