தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 9 ஜூன், 2020

அஞ்சலி


அஞ்சலி
தோழர்களே,
நமது மாநில துணத்தலைவர் தோழர் K.மாரிமுத்து அவர்கள் இன்று 09.06.2020 அதிகாலை 2.30 மணியளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோவை மாவட்டத்தில் லைன்ஸ்டாப் சங்கத்தின் மாவட்ட செயலாளராக, பின்னர் BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாநில பொறுப்பாளராக பல ஆண்டு காலம் மிகச்சிறப்பாக பணியாற்றியவர். 1980ல் காசுவல் ஊழியராக பணியில் சேர்ந்த தோழர் K.மாரிமுத்து அவர்கள் 1990ல் வயர்மேனாக தேர்வு பெற்றார்.  பின்னர் 1995ல் டெலிகாம் மெக்கானிக்காக பதவி உயர்வு பெற்றார்.  அதன் பின்னர் இரண்டு முறை எழுத்தர் தேர்வில் வெற்றி பெற்ற போதும், லைன்ஸ்டாப் சங்கத்தின் மீது இருந்த பற்றின் காரணமாக அந்த பதவி உயர்வை ஏற்றுக்கொள்ளாமல் டெலிகாம் டெக்னீசியனாகவே பணி ஓய்வு பெற்றுள்ளார்.  கே.ஜி. போஸ் அவர்களின் கொள்கைகளின் மீது மாறாத பற்றுடைய தோழர் மாரிமுத்து கோவை மாவட்டத்திலும், தமிழகம் முழுவதிலும் லைன்ஸ்டாப் சங்கத்தினை கட்டிய தலைவர்களின் ஒருவர்.  மிகச்சிறந்த போராளி.  மாநில தலைமையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர்.  மேடைகளில் கணீரென்ற குரலில் ஆணித்தரமாக நமது கருத்துக்களை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கவர் தோழர் மாரிமுத்து.  .தனது உடல்நிலை காரணமாக கடந்த ஏப்ரல் 2019 ல் விருப்ப ஓய்வில் சென்றார்.. கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த போதும் உறுதியுடன் அனைத்து இயக்கங்களும் கோவையில் வெற்றிகரமாக்கிட அனைத்து பணிகளையும் செய்து வந்தவர்.  மன உறுதி மிக்க தோழர். தோழர் மாரிமுத்து அவர்களின் மறைவிற்கும் , அவர்களின் குடும்பத்தாருக்கும் கோவை மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது. அவரது இறுதி சடங்குகள் கோவையில் மாலை 4 மணிக்கு கோவை சிங்காநல்லூரில் உள்ள சாந்தி மின் மயானத்தில்  நடைபெறும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக