தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

மகாப் பண்டிதர் மதிவாணனின் நொள்ளைக் கணக்கு!

NFTE சங்கத்தின் மூளை ; 0.P. குப்தாவிற்கு இணையான அறிவுஜீவி என்றெல்லாம் அவரது அடிவருடிகளால் சொறிந்து விடப்படுபவர்தான் C.K.மதிவாணன். இந்த மகாப்பண்டிதர் மதிவாணனுக்கு மீண்டும் மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது. "BSNLEUவிற்கு முதன்மைச் சங்கம் என்ற அந்தஸ்து இனி கிடையாது. BSNLEU மற்றும் NFTE இரண்டுக்குமே 35% வாக்குகள் கிடைத்துள்ளதால், இரண்டு சங்கங்களுக்குமே சமமான அந்தஸ்துதான் கிடைக்கும்." அங்கீகாரத்திற்கான உத்தரவை BSNL நிர்வாகம் பிறப்பிப்பதற்கு முன்பாகவே, மகாப்பண்டிதர் மதிவாணன் செய்த முழக்கம்தான் இது. "அட முண்டமே! 8995 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ள BSNLEU வுக்கு இனணயான அந்தஸ்து NFTEக்கு எப்படி கிடைக்கும் என்று NFTEல் கொஞ்சமாவது மூளை உள்ளவர்கள் மதிவணனிடம் கேட்டார்களா என்பது நமக்குத் தெரியாது. இந்த லட்சணத்தில், BSNLEU வின் பொதுச் செயலர் தோழர் P. அபிமன்யுவிற்கு பீதி ஏற்பட்டு விட்டது என்றுவேறு இந்த மகாப்பண்டிதர் குதூகளித்துக் கொண்டார். ஆனால் BSNL நிர்வாகமோ BSNLEU தான் மீண்டும் முதன்மைச் சங்கம் என்று மகுடம் சூட்டியுள்ளது. மகாப் பண்டிதர் மதிவாணனின் கணக்கு நொள்ளைக் கணக்காகி விட்டது. இருந்தாலும் பரவாயில்லை. மகாப்பண்டிதர் சமாளித்துக் கொள்வார். ஏனென்றால், அவருக்குத்தான் சூடு, சொறணை என்பதெல்லாம் மருத்துக்குக் கூட கிடையாதே. இதற்குப்பிறகும், எப்போதும் போல் பல்லிளித்துக் கொண்டே இருப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக