தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 27 ஜூலை, 2018

கோவை உண்ணாவிரதபோராட்டம்


AUAB   சார்பாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 3 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் கோவையில் 3 ம் நாளாக 26-07-2018 அன்று கோவை மத்திய தொலைபேசி நிலைய வளாகத்தில் துவங்கியது.இந்த நிகழ்ச்சிக்கு தோழர்கள் ஏ.முகமது ஜாபர், BSNLEU, பாலசுப்பிரமணியம் NFTEBSNL ,K.சகான். SNEA  ,வனராஜ்(AIBSNLEA)  கூட்டுத்தலைமை ஏற்றார்கள்.
கோரிக்கைகள்.
1)  3 வது உடன்பாட்டுக்கான அமைச்சரவை குறிப்பை உடனடியாக வழங்கி தீர்க்க வேண்டும்
2)  பென்சன் மாற்றத்தை உடனடியாக அமலாக்கிட வேண்டும்
3)  பென்சன் வழங்குவதற்கான பிடித்தம் என்பது வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
4)  4 ஜி சேவையை உடனடியாக BSNL க்கு வழங்கிட வேண்டும்
முன்னதாக 24-07-2018 அன்று பொள்ளாச்சியிலும் 100 பேரும், 25-07-2018 அன்று திருப்பூரிலும் 150 பேரும் எழுச்சியுடன் நடைபெற்றது.கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.மாவட்டம் முழுமையும் இருந்து ஊழியர்கள் ,அதிகாரிகள் பங்கேற்றனர்.கோரிக்கைகளின் நியாயங்களை விளக்கி தோழர்கள்
சி.ராஜேந்திரன்,DS BSNLEU) ,ஏ.ராபர்ட்ஸ்( DS, NFTE BSNL),சக்திவேல் ( DS AIBSNLEA),T.K.பிரசன்னன் (DS,SNEA),K.மாரிமுத்து(மாநில உதவி தலைவர், BSNLEU),N.P.ராஜேந்திரன்(மாநில அமைப்பு செயலர், BSNLEU),செம்மல் அமுதம் (NFTE அகில இந்திய அழைப்பாளர்), எல்.சுப்பராயன் (NFTE- மாநில பொருளாளர்),சிவராஜ்( AIBSNLEA), I.மனோகரன்(SNEA செயற்குழு உறுப்பினர்),தனுஸ் கோடி ( AIBSNLEA  பகுதி செயலாளர்)  ஆகியோர் உரையாற்றினார்கள்
மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். PR நடராஜன் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கதலைவர் தோழர். G.ராமகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்
பிரச்சனை தீராவிடில் அடுத்தகட்ட தீவிரமான போராட்டங்களை நடத்த மத்திய  AUAB முடிவெடுக்க வேண்டும் என கூட்டத்தில் பேசி தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
தோழர் வி.வெங்கட்ராமன்,மாவட்ட செயலர் ,AIBDPA மற்றும் அருணாசலம் மாவட்ட செயலர் DOTBSNLபென்சனர் சங்கம் வாழ்த்துரை வழங்கினார்கள்
இறுதியில் தோழர்.செள.மகேஸ்வரன்,மாவட்ட பொருளாளர், BSNLEU நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக