பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி
கோவை, ஏப். 24-
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி நிரந்தர ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் 400க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கான ஊதியம் மாதக்கணக்கில் இழுத்தடித்து தரப்படுகிறது. இதுகுறித்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குறிப்பாக, மார்ச் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் , இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து செவ்வாயன்று நிரந்தர ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி என்.பி. ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் சௌ.மகேஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஏரளாமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். திருப்பூர்திருப்பூர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் செவ்வாயன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளை தலைவர்கள் கனகராஜ், மோகன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முகமது ஜாபர், மாவட்ட இணைச் செயலாளர் காந்தி, மாநில நிர்வாகிகள் முத்துக்குமார், சுந்தரகண்ணன், சுப்பிரமணியம், மாவட்ட உதவி தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக