தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 5 செப்டம்பர், 2016

களம் காண தயாராவோம்



அறிக்கையை பதிறக்கம் செய்ய <<< அறிக்கை எண் 41 >>>

BSNL  ஊழியர் சங்கம்  கோவை மாவட்டம்
களம் காண தயாராவோம்
அறிக்கை எண் 41

தோழர்களே !
12-08-2016 அன்று கோவை மாவட்ட  PGM அவர்களை பேட்டி கண்டோம்.தீராத பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி கடிதம் தந்தோம். NOT Feasible area Out Sourcing  பற்றி தெரிவித்தார். Out Sourcing   பற்றி விரிவாக  விவாதிக்க வேண்டும் .நம்மால் சேவை தரும் பகுதிகளில் Out Sourcing   அவசியமில்லை என தெரிவித்தோம்.இத்துடன் GCS சேவையில் ஆட்கள் நியமனம் குறிப்பிடப்படபில்லை என்பதையும் குறிப்பிட்டு கடிதம் வலியுறுத்தியது.
இந்த நிலையில் 24-07-2016 அன்று LL 49 பற்றி நடைபெற்ற விவாதத்தில் Out Sourcing   பற்றி கேள்வி எழுப்பினோம்.நமது எதிர்ப்பையும் , கருத்தையும் பதிவு செய்தோம் .விவாதம் அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
முன்னேற்றமில்லாத நிலையில் 31-08-2016 அன்று  போராட்ட நிலைப்பற்றி PGM அவர்களை சந்தித்து கடிதம் தந்தோம்.சமாதான பேச்சுவார்த்தையை நாம் ஏற்கவில்லை டெண்டர் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே  நமது நிலை  
 06-09-2016 அன்று மாலை 4 மணிக்கு டெலிகாம் பில்டிங்கில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்பதை உறுதி செய்தோம்.
1)      கார்ப்பரேட்  அலுவலக  உத்திரவு என்ற பெயரில் தனியார் மயத்தை அனுமதிக்க முடியாது.
2)      GCS திட்டத்தில் ஆட்குறைப்பையும், நல சட்டங்கள் புறக்கணிப்பை ஏற்க முடியாது
3)      ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்சனை  ESI, EPF அமலாக்கம் குறைந்தபட்ச ஊதிய நிலுவை , போனஸ் ஆகியவை காகித வடிவில் தொடர்வதை ஏற்க முடியாது
4)      இடமாறுதலில் விருப்பத்தின் அடிப்படையில் உத்திரவுகள் வெளியிடப்படுவதையும் விருப்ப மாறுதல்களில் இழுத்தடிப்பு சரியல்ல
5)      சேவை பாதுக்காப்பில் அக்கறையற்ற தன்மை நீடிக்கிறது. HMT, TOOLS, TOOL BAG, CABLE, DROPWIRE , LJU, INSTRUMENT ,FAULT LOCATOR  with SCANNER, யாவும் இல்லாமல் சேவையை தர இயலாது. இது மட்டுமல்ல   POOR MOBILE SIGNAL பிரச்சனைகள் பல முறை கூறியும் சரி செய்யப்படவில்லை  ,
6)      கோவையில் ஒரே ஒரு மருத்துவமனை போதாது.கூடுதல் மருத்துவமனைகள் அவசியமாகிறது
7)      ரூ.100 / குறைந்தபட்ச பலன் ( OTBP /BCR ) ஊழியர்களுக்கு வழங்குவதில் காலதாமதம் தொடர்கிறது
8)      அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அக்கறையற்ற போக்கே நீடிக்கிறது.பர்னிச்சர், எலக்ட்ரிக்கள் பழுது, குடிநீர் வசதிகள் ,என அனைத்திலும் மெத்தனம் உள்ளது.
9)      IPR விபரங்கள் பெறுவதில் காட்டப்படும் கண்டிப்பு இதுவரை நாம் காணாதது
10)  வங்கிகடன் திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு நிர்வாகமே பொறுப்பு .அதற்காக ஊழியர்களுக்கு  PENALTY “ என்பதை  ஏற்க முடியாது.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வை உருவாக்க நினைக்கிறோம்.வரும் 08-09-2016 அன்று நடைபெறும் அகில இந்திய தர்ணாவை தொடர்ந்து நடைபெறும் அவசர மாவட்ட செயற்குழு அடுத்த கட்டம் பற்றி உறுதி செய்யும்.

தோழமையுடன்

 சி.ராஜேந்திரன்
மாவட்ட செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக