SC/ST என்பது
ஒரு தனி அமைப்பு, அதில் யார் தலைமைக்கு வருவது என்பதை சம்பந்தபட்ட SEWA BSNL
உறுப்பினர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
.அது தான் ஜனநாயகம் .இப்படிப்பட்ட ஜனநாயகத்தின் மேல் நூறு சத நம்பிக்கை கொண்டிருப்பது
தான் BSNL ஊழியர் சங்கம். சமுதாயத்தில் அடித்தட்டில் இருக்கும்
மக்களுக்காக , ஊழியர்களுக்காக தொடர்ந்து போராடி வருவது தான் BSNLEU. எவ்வளவு ஆதாயம் கிடைக்கும் எத்தனை பேர்
வாக்களிப்பார்கள் என்ற நிலையில் இருந்து SC/
ST ஊழியர் பிரச்சனையை அனுகுவது BSNLEU அல்ல.
அந்த பெருமை NFTE BSNL க்கும் மட்டுமே உண்டு .கடந்த தேர்தலில் கடுமையான
விமர்சனங்களை முன்வைத்த SNATTA (புதிய TTA தோழர்கள் ) மேல் காற்புணர்ச்சி காட்டாமல் அவர்களின்
கோரிக்கைகளை மிகச்சரியான கோனத்தில் அணுகி தீர்த்து வைத்ததால் தான் கடந்த முறை NFTE BSNL லில் இருந்த SNATTA இம்முறை BSNLEU
வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. எனவே SC/ST
ஊழியர் நலன்காக்க தோடர்ந்து போராடி வரும்
BSNLEU வில் உள்ள மிகப்பெரும்பான்மையான ஊழியர்கள் SC/ST பிரிவைச்சார்ந்தவர்கள்
என்பதை விளக்க தேவையில்லை. வெளியில் இருக்கும் ஏனைய சங்கங்கங்களை சார்ந்த SC/ST ஊழியர்களும் இம்முறை BSNLEUவுக்கு வாக்களிப்பது
உறுதி என்பதை தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொளிகின்றோம். .12-05-2016 ல் வாக்கு எண்ணிக்கை
நிறைவடைந்து முடிவுகள் வெளியிடப்படும் பொழுது யார் யாருக்கு வாக்களித்தார்கள் , யார்
யார் பக்கம் நிற்கிறார்கள் என்பது தெளிவாகிவிடும்.
வீனான
கோயபல்ஸ் பிரச்சாரத்தையும்,தலைவர்கள் மீது அவதூறை பரப்புவிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்
என்றும் கொள்கை அடிப்படையில் தோழர்களுக்காக போராடும் தலைவர்களின் மீது கொச்சையான விமர்சனங்கள்
வைப்பது தொடர்ந்தால் பதிலடி கடுமையாக இருக்கும் என்பதை எச்சரிக்க விரும்புகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக