தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகை

‘லேண்ட் லைன்’ இணைப்பு வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் மே 1-ம்தேதி முதல் பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
இது குறித்து பி.என்.என்.எல். நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:  மே மாதம் முதல் தேதியிலிருந்து லேண்ட்லைன் தொலைபேசி இணைப்பு வைத்திருப்போர், இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணி வரை நாடு முழுவதும், எந்த நிறுவனத்தின் லேண்ட்லைன் தொலைபேசிகளுக்கும், செல்போன் எண்களுக்கும் கட்டணமின்றி எண்ணிக்கை இல்லாமல் பேசிக்கொள்ளலாம்.
இந்த திட்டம் கிராம மற்றும் நகரங்களில் இணைப்புகள் பெற்றுள்ள அனைவருக்கும் பொருந்தும். மேலும், தரைவழி தொலைபேசியில் சிறப்பு திட்டம் வைத்திருப்போர், பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்போருக்கும் இத்திட்டம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக