அருமைத் தோழர்களே! நமது BSNL ஊழியர் சங்கத்தின் 7ஆவது தமிழ் மாநில மாநாடு திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகில் உள்ள நியூ டைமண்ட் மஹாலில் 2014, அக்டோபர் 11 முதல் 13 வரை சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. அக்டோபர் 11ஆம் தேதி காலை சரியாக பத்து மணிக்கு பொது அரங்க நிகழ்ச்சிகள் துவங்க உள்ளது. பொது அரங்க நிகழ்ச்சிகளுக்கு அனைத்துதோழர்களையும் வருக வருக என கோவை மாவட்ட மாவட்ட சங்கம் அன்புடன் வரவேற்கிறது. நமதுபொது செயலாளர் தோழர் P.அபிமன்யு, பாராளுமன்ற உறுப்பினர் தோழர் T.K.ரங்கராஜன், தமிழகதீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் தோழர் P.சம்பத், தமிழ் மாநில தலைமைபொது மேலாளர் திரு G.V.ரெட்டி ITS மற்றும் மாநில செயலாளர் தோழர் S.செல்லப்பா ஆகியோர்உரை நிகழ்த்த உள்ளனர். எனவே தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது கலந்துக் கொள்ளவேண்டும் என தோழமையுடன் மதுரை மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.
திருச்சி 7வது BSNLEUதமிழ் மாநில மாநாட்டிற்கு வாரீர் ! வாரீர் !!
---என்றும் தோழமையுடன்,சி.ராஜேந்திரன்
...D/S-BSNLEU.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக