கோவை:பி.எஸ்.என்.எல்., கூட்டு போராட்டக்குழு சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணிநேர அலுவலக வெளிநடப்பு போராட்டம், கோவை பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்க மாநில தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். போராட்டத்தில், ‘‘கேடர்களின் ஊதிய மாற்றம் குழுவை புதுப்பித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், நிதிநிலையை சுட்டிக்காட்டி தொடர்ந்து மறுக்கப்படும் அலவன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியாருக்கு அளிக்காமல் கால்சென்டர்களை நிர்வகிக்கும் பொறுப்பை பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும், காலி யாக உள்ள எஸ்.சி மற்றும் எஸ்.டி., ஊழியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும், கடந்த 1.1.2007 முதல் 7.5.2010 வரை பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள் ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அலுவலக வெளிநடப்பு போராட்டம், காலை 11 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரையில் நடந்தது. இர ண்டு மணிநேரம் அலுவலக பணிகளை ஊழியர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். கோரிக்கைகள் வலியுறுத்தி கோ ஷங்கள் எழுப்பப்பட்டன. அலுவலர்கள் மத்தியில் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதேபோல், சாய்பாபா காலனி தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தை செயலாளர் அன்பழகன் துவக்கி வைத்தார். பத்மாவதி தலைமை தாங்கி பேசினார். பிஎஸ்என்எல்இயு மாவட்டத் தலைவர் கே.சந்திரசேகரன் விளக்கவுரை ஆற்றினார். என்எப்டிஇ மாவட்டச் செயலாளர் என்.ராமகிருஷ்ணன், என்எப்டிஇ கிளைச் செயலாளர் பேரின்பராஜ், சுந்தரராஜ் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். முடிவில் வி.கருணாகரன் நன்றி கூறினார். போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும், கோவை மாவட்டம் முழுவதும் 8 பிஎஸ்என்எல் அலுவலகங்களில்வெளிநடப்பு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக