போனஸ்
குழு உறுப்பினர் நியமனம் மற்றும் ஆய்படு பொருள் பற்றி கீழ்க்கண்டவாறு நிர்வாகத்திற்கு
நமது பொதுச் செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
போனஸுக்கான புதிய விதிமுறைகளைக் கண்டறிவதற்காக
ஒரு குழு அமைக்கப் பட்டிருக்கின்றது.
அதில் நிர்வாகத் தரப்பில் இருந்து 5 உறுப்பினர்களும்
ஊழியர் தரப்பில் இருந்து 2 உறுப்பினர்களும்
(NATIONAL JCM தலைவரும் செயலரும்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாகத் தரப்பு உறுப்பினர்களும்
ஊழியர் தரப்பு உறுப்பினர்களும்
சரி சமமான எண்ணிக்கையில் நியமிக்கப்
படுவதே,
இது வரை கடைப்பிடிக்கப்படும் நடைமுறை.
இதற்கு முரணாக இம்முறை
நிர்வாகத் தரப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில்
உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டிருப்பதில் எந்த நியாயமும் இல்லை.
18.10.2013 அன்றைய பேச்சு வார்த்தையில்
கவுன்சில்களுக்கான பிரதிநிதித்துவ
விகிதாச்சார அடிப்படையில்
அனைத்துக் குழுக்களிலும் பிரதிநிதித்துவம்
வழங்க வேண்டும்
என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் ஏற்றுக்கொண்டபடி
போனஸ் குழுவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.
“செயல்பாட்டு நிர்வாக ஒழுங்குமுறையை
(PERFORMANCE MANAGEMENT SYSTEM)” அடிப்படையாக வைத்து
புதிய போனஸ் விதிகளை உருவாக்குவதே
போனஸ் குழுவின் ஆய்படு பொருளாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
அதை ஏற்க இயலாது.
”DPE வழிகாட்டுதல்களின்
படி
பொதுத்துறை நிறுவனங்கள் போனஸ் வழங்கலாம்”
என்று DOT அறிவுறுத்தியுள்ளது.
”பொதுத்துறை நிறுவனங்களில்,
ஊதியம் மட்டுமே உற்பத்தி மற்றும் செயல்பாட்டுடன் தொடர்புடையது.
போனஸ் வழங்குவதற்கு உற்பத்தி
மற்றும் செயல்பாட்டை
தொடர்பு படுத்த வேண்டிய அவசியம்
இல்லை”
என்பதே DPEன்
வழிகாட்டுதல்.
எனவே அந்த அடிப்படையில்
போனஸ் வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை உருவாக்குவதே
போனஸ் குழுவின் பணியாக இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக