தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 25 நவம்பர், 2013

ரூ.20ஆயிரம்கோடிசீட்டுக்கம்பெனி ஊழல்

சீட்டுக் கம்பெனி ஊழலில் சிக்கியுள்ள திரிணா முல் . . .

ரூ.20ஆயிரம்கோடிசீட்டுக்கம்பெனி
ஊழல்:மம்தாவுக்குதொடர்பு?




மேற்குவங்கத்தில் நடந்துள்ள பல்லாயிரம் கோடி சீட்டுக் கம்பெனி ஊழல் வழக்கில் திரிணாமுல் கட்சியின் தலைவியும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜியின் பெயரும் அடிபட துவங்கியுள் ளது.இந்த வழக்கில் சாரதா குழுமத்தின் ஊடகதலைவராக இருந்த குணால் கோஷ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி குணால் கோஷ் திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. சாரதா சீட்டுக் கம்பெனியின் தலைவர் சுதிப்தா சென்னுடன் கூட்டாக சதி செய்து மக்கள் பணத்தை சூறையாடினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் குணால் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.குணால் கோஷ், அவரது அரசியல் வாழ்வின் துவக்கத்திலிருந்தே மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். சாரதா சீட்டுக் கம்பெனி ஊழல் வழக்கு அம்பல நாளிலிருந்தே குணால் கோஷ்க்கும் இதில் இருக்கும் தொடர்பு பகிரங்க மாகவே தெரிய வந்தது. ஆனாலும் கடந்த 8 மாதங்களாக விசாரணை என்ற    பெயரில் 11 முறை அவர் காவல்துறை முன்பு ஆஜரான போதிலும் கைது செய்யப் படவில்லை.இந்நிலையில் திரிணாமுல் காங்கிரசின் மேல்மட்டத்திற்கும் தொடர்பு இருப்பது வெ ளிச்சத்திற்கு வந்ததை தொடர் ந்து குணால் கோஷ் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். சாரதா சீட்டுக் கம்பெனியின் ஊடகப் பிரிவு, மம்தா பானர்ஜியை நாட்டின் அடுத்த பிரதமராக மக்களிடையே முன்மொழிந்து அதற்கான பிரச்சாரத்தை நடத்துவதற்காகத்தான் துவக்கப்பட்டது என்று குணால் கோஷ் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.இது மம்தா பானர்ஜிக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் சாரதா சீட்டுக்கம்பெனியின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. மேற்கு வங்க ஏழை, எளிய நடுத்தர மக்களிடம் முதலீடாக பெறப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடியை இந்தக் கம்பெனி சூறையாடியது. இவர் கள் பல்வேறு துணை நிறுவனங்கள் அமைத்து பொன்ழி என்ற சீட்டுத் திட்டத்தையும் நடத்தி வந்தார்கள்.இதில் திரி ணாமுல் அமைச்சர்கள், எம் பிக்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குணால் கோஷ் தற்போது வெளிப்படுத் தியிருக்கிறார். சுமார் 17 லட்சம் சிறு முதலீட்டாளர்கள் இந்த சீட்டுக் கம்பெனியில் பணம் போட்டு ஏமாந்து இருக்கிறார் கள். இவர்களிடம் பணம் பெற்ற பல ஏஜெண்டுகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.இந்தியாவில் சமீப கால வரலாற்றில் நடந்துள்ள இந்த மிகப் பெரும் சீட்டுக் கம்பெனி ஊழலில் சிக்கியுள்ள திரிணா முல் எம்.பி.குணால் கோஷ், கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் இதில் தொடர்புடைய முக்கிய நபர்களின் பெயர்களை வெளி யிட்டிருக்கிறார்.முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் பொதுச் செயலாளர் முகுல்ராய், எம்.பிக்கள் சுவேந்து அதிகாரி, கே.டி.சிங், ஸ்ரிஞ்சாய் போஸ் உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன. சாரதா சீட்டுக் கம்பெனியில் நடந்த அனைத்தும் மேற்படி 12 பேருக்கும் தெரியும் என்று குணால் கோஷ் குறிப்பிட் டுள்ளார்.இது, இந்த மிகப்பெரும் ஊழலில் மம்தா பானர்ஜிக்கும் தொடர்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது.இந்நிலையில் இந்த வழக்கை மேற்குவங்க காவல்துறை விசாரிப்பது பொருத்தமானது அல்ல, உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். (ஐஎன்என்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக