தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 11 மே, 2013

சாவேஸ் மறைந்தார்:சாவேஸ் மறைந்தார்:


வெனிசூலா நாட்டின் அதிபர் தோழர் ஹியுகோ சாவேஸ் தனது 58 ஆவது வயதில்
புற்று நோயால் மரணமடைந்தார் என்ற செய்தி வந்துள்ளது.
பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாய் இருந்த வெனிசூலா இவர் அதிபராக வந்த பின் பன்னாட்டு கம்பெனிகளின் சுரண்டலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வந்துள்ளது. அந்நாட்டின் எண்ணெய் வளங்களை சுரண்டிக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவன்ங்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். அந்நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். நாட்டின் இயற்கை வளங்களில் இருந்து கிடைத்த வருமானத்தை எல்லாம் தன்னாட்டின் சாதாரண மக்களின் ஏழ்மையை துடைக்க பயன்படுத்தினார். இவரது அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்க ஏகாதிபாத்தியத்திற்கு கோபத்தை உருவாக்கியது. அவரை ஆட்சியிலிருந்து அகற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் வெனிசூலா நாட்டு மக்களின் மகத்தான ஆதரவுடன் தொடர்ச்சியாக நான்கு முறை அதிபராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று உலகின் பல நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் உத்தரவிட்ட பொருளாதார கொள்கைகளை அமுலாக்கிக் கொண்டிருக்கும் போது தோழர் சாவேஸ் அதனை நிராகரித்தார். அவர் உழைக்கும் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கான மாற்று பொருளாதார கொள்கைகளை முன்வைத்தார். அதனை தனாது நாட்டில் வெற்றிகரமாக அமுலாக்கினார். அவரால் ஆகர்ஷிக்கப்பட்ட அனைத்து தென்னமெரிக்க நாடுகளும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் கட்டளையை நிராகரித்து தோழர் சாவேஸ் காட்டிய பாதையில் நடக்க துவங்கியுள்ளனர். தோழர் சாவேஸ்,சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் உழைக்கும் வர்க்க இயக்கத்தின் ஆதர்ஷ சக்தியாக என்றும் விளங்குவார். தோழர் சாவேஸ் கடைபிடித்த கொள்கைகள் வெற்றி பெற உறுதி பூணுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக